Lankamuslim.org

One World One Ummah

பொலிசார் சந்தேக நபர்களை சித்திரவதை செய்கின்றனர்

leave a comment »

Human Rights Councilஇலங்கை  பொலிஸ்  சந்தேக நபா்களை சித்திரவதை செய்வதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் காவல்துறையினர் சந்தேக நபர்கள் கைதிகளை அடிக்கடி சித்திரவதைக்கு உட்படுத்துவதாகவும், மோசமாக நடாத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

காவல்துறையினரின் துஸ்பிரயோக சம்பவங்களை கண்காணிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்கு மூலங்களை பெற்றுக கொள்வதற்காக காவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான ஓர் உத்தியாகப் பயன்படுத்தி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் குறைந்தளவில் பொறுப்பு கூறல்கள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 58 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடுமையாக தாக்குதல், மின்சாரம் பாய்ச்சுதல், பாலுறுப்பு மற்றும் கண்களில் மிளகாய் தூள் தடவுதல்  உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கைதிகள் துன்பறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களப் பெரும்பான்மையைச் சேர்ந்தவர்கள் மீதும் காவல் நிலையங்களில் இவ்வாறான சித்திரவதை சம்பவங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் போலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதற்கான ஒரு சாதாரண வழியாக இலங்கை போலிஸார் சித்ரவதைகளை பயன்படுத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைக்கான ஆய்வுகளை தலைநகர் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் 2014 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் நடத்தியது. இந்த அமைப்பின் முன்னைய அறிக்கைகள் போர் சார்ந்த துஷ்பிரயோகங்களை பற்றி பேசியிருந்தன. அதில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவித்த பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய அறிக்கை சிங்கள சமூக மக்களும் போலிஸாரால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்கிறது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2015 இல் 1:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: