Lankamuslim.org

One World One Ummah

யூதப் படுகொலைக்கு பலஸ்தீன தலைவர் மீது குற்றம்சாட்டிய நெதன்யாகுவுக்கு ஜேர்மனி பதிலடி

leave a comment »

hjjgநாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்ல பலஸ்தீன தலைவரே அறிவுரை வழங்கியதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சுமத்திய குற்றச்சாட்டை ஜெர்மனி கடுமையாக நிராகரித்துள்ளது.

இந்த யூதப் படுகொலைகளுக்கு நாஜிக்களே பொறுப்பு என்பதில் ஜேர்மனி மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்று அந்நாட்டு அரச தலைவர் ஏன்ஜலா மேர்கல் குறிப்பிட்டுள்ளார்.

பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிடும் போது, ஹிட்லர் யூதர்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றும் தேவையுடையவராக மாத்திரமே இருந்தார், ஆனால் ஜெரூசலம் தலைமை முப்தி ஹாஜ் அமீன் அல் ஹுஸைனே, அவர்களை தீக்கிரையாக்குமாறு அறிவுரை வழங்கினார் என தெரிவித்திருந்தார் .

நெதன்யாகுவின் இந்த கருத்தை இஸ்ரேல் வரலாற்றியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர். ஜேர்மனி சென்றிருக்கும் நெதன்யாகு மேர்க் கலுடன் இணைந்து உரையாற்றும்போது, ‘ஹிட் லரே யூதப் படுகொலைக்கு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் கடந்த செவ்வாயன்று ஜெரூசலத்தில் உலக சியோனிச மாநாட்டில் உரையாற்றிய நெதன்யாகு, ஹுஸைனே இந்த ஆலோசனையை வழங்கினார் என குறிப்பிட்டுள்ளார் . ‘அப்போதைய நிலையில் யூதர்கள் மீது கடும் போக்கை கையாள ஹிட்லர் நினைக்கவில்லை. யூதர்களை வெளியேற்றவே அவர் விரும்பினார்” என்று அந்த மாநாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்

‘ஹாஜ் அமீன் அல் ஹுஸைன் ஹிட்லரிடம் சென்று, நீங்கள் அவர்களை வெளியேற்றினால் எல்லோரும் இங்கு வந்துவிடுவார்கள். அப்போது, அவர்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று ஹிட்லர் கேட்டார். அதற்கு ஹுஸைன், அர்களை தீக்கி ரையாக்கிவிடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார் .

நெதன்யாகுவின் இந்த கருத்து சர்வதேச அளவில் யூதர்களிடமும் கடும் கண்டன த்தை ஏற்படுத்தியுள்ளது.1974ஆம் ஆண்டு மரணமடைந்த பலஸ்தீன  தலைவரான ஹு ஸைன் 1920கள் மற்றும் 1930களில் இஸ்ரேல் நாட்டை உருவாக்கும் பிரிட்டனின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவராவார்.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 22, 2015 இல் 6:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: