Lankamuslim.org

One World One Ummah

சிங்கள பௌத்த நாட்டை காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும்: விமல்

leave a comment »

hjஅன்று வன்னியில் ஆரம்பித்த போராட்டம் ஜெனிவாவில் பலப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் நாட்டில் பலமடையும் வேலையே தற்பொழுது நடைபெற்றுள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை இந்த அரசாங்கம் வழங்கிவருகின்றது. ஆகவே இப்போதும் சிங்கள பௌத்த மக்கள் அமைதியாக இருந்தால் இந்த நாட்டை கட்டிக்காப்பற்ற முடியாது. அன்று யூத்தம் முடிவடைந்தவூடன் சிங்கள மக்கள் சிங்கக்கொடிகளை ஏந்தி இந்த நாட்டை எவ்வாறு பாதுகாத்தனரோ அதேபோல் மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பௌத்த நாட்டை காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்த உரையாற்றிய அவர்:

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற யூத்தத்தில் புலிகளினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், விரட்டியடிக்கப்பட முஸ்லிம் மக்கள், படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களின் இறப்புகளுக்கு காரணம் கேட்க்காத சர்வதேச சமூகம் புலிகளின் இறப்பிற்கு மாத்திரம் காரணம் கேட்கின்றது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் புலி ஆதரவாளர்களுக்காகவே இன்று யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க முயல்கின்றன. அதேபோல் நாட்டை காப்பாற்றிய இராணுவத்தை சிறைகளில் அடைத்து புலிகளை விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு இந்த அரசாங்கம் வந்துள்ளது. கைது செய்யப்பட புலிகளை தண்டிக்காத வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதேபோல் யுத்த குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் இவர்கள் முயற்சிப்பது வெறுமனே விசாரணைகளை செய்வது அல்ல. அதையும் தாண்டி நாட்டில் பிரிவினையை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். வடக்கிற்கு தேவையான அனைத்தையூம் பெற்றுக்கொண்டுத்து வடக்குக் கிழக்கை ஒன்றிணைந்த மாகாணமாக மாற்றி அவர்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்களை கொடுப்பதன் மூலமும், வடமாகாண சபையின் கீழான அதிகாரங்களை பலப்படுத்தி விடுதலை செய்யப்போகும் புலிகளை வடக்கின் பொலிஸாக மாற்றி இறுதியில் புலிகளின் பாதுகாப்பின் கீழான தனி ஈழத்தினையே அமைக்க முயற்சிக்கின்றனர்.

ஆகவே இப்போதும் சிங்கள பௌத்த மக்கள் அமைதியாக இருந்தால் இந்த நாட்டை கட்டிக்காப்பற்ற முடியாது. ஆகவே அன்று யுத்தம் முடிவடைந்தவுடன் சிங்கள மக்கள் சிங்கக்கொடிகளை ஏந்தி இந்த நாட்டை எவ்வாறு பாதுகாத்தனரோ அதேபோல் மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பௌத்த நாட்டை காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும். இந்த நாட்டை சிங்கள நாடாகவே பாதுகாத்து எமது இராணுவ வீரர்களையும் எமது மக்களையும் பாதுகாக்க வேண்டும் . சிங்கள நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என மேலும் தெரிவித்தார். TC

hji hj

Written by lankamuslim

ஒக்ரோபர் 20, 2015 இல் 10:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: