Lankamuslim.org

One World One Ummah

சிறுமி சேயா கொலை: கொண்டயா விடுதலை, எனினும் விளக்கமறியலில்

leave a comment »

z_p01-Kondayaசேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சேயா கொலையை மேற்கொண்டதாக முன்னதாக கொண்டயா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் அவரது சகோதரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கொண்டயாவின் மரபணு சேயாவின் சடலத்தில் காணப்பட்ட மரபணுவுடன் பொருந்தவில்லை.எனினும் அவரது சகோதரரது மரபணு பொருந்தியதாக நீதிமன்றில் பொலிஸார் அறிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் கொண்டயா இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரரை எதிர்வரும் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் அவர் மீதுள்ள வேறு சில குற்றங்களுக்காக கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் அத்தனகல்ல மற்றும் கம்பஹா ஆகிய நீதிமன்றங்களில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2015 இல் 9:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: