Lankamuslim.org

One World One Ummah

ஐ.நா நகர்வு தொடர்பில் : மைத்திரி மற்றும் ஹசன் அலி

leave a comment »

ghgஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யினால் நாட்டிற்கோ பொது­மக்­க­ளுக்கோ  எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக நான் ­கூ­று­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்துள்ளார்

அதேவேளை ஐ.நா.வின் ஜெனீவா பிரே­ர­ணையில் ஏழு வருட கால யுத்­தக்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் விசா­ரிக்­கப்­பட வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­பது முஸ்­லிம்­க­ளுக்குப் பாதிப்­பாகும்.

அதனால் வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் விரட்­டப்­பட்ட காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து விசா­ர­ணைகள் மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் விஷேட ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த நிலைப்­பாட்­டினை பல­த­ட­வைகள் கடந்­த­கால அர­சாங்­கத்­திலும் தெரி­வித்­தி­ருந்தும் விஷேட ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் நாட்டில் யுத்த நிறுத்த உடன்­ப­டிக்கை மீறப்­பட்ட -மாவில்  ஆறு சம்­ப­வத்­தி­லி­ருந்து அதாவது 2002.02.22 ஆம் திக­தி­யி­லி­ருந்து யுத்த முடி­வுக்கு வந்த 2009.05.18ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற யுத்த குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்­ளக பொறி­முறை மூலம் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்றே ஜெனீவா பிரே­ரணை தெரி­விக்­கி­றது.

இதே­வேளை இதற்கு முன்­னைய காலத்­தி­லி­ருந்தே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனச் சுத்­தி­க­ரிப்பு நடை­பெற்­றுள்­ளது. வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் அனை­வரும் 1990ஆம் ஆண்டில் பலாத்­கா­ர­மாக துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டார்கள். பள்­ளி­வா­சல்­களில் தொழுது கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

கிழக்கில் முஸ்­லிம்­களின் பல்­வேறு இடங்களில் 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் பறி­போ­னது. ஆயு­தக்­கு­ழுக்கள் திட்­ட­மிட்டு இதனைச் செய்­தன. உன்­னிச்சை பிர­தே­சத்தில்  முஸ்­லிம்­களின் நல்ல விளைச்சல் காணி­களை ஆயு­த­தா­ரிகள் பலாத்­கா­ர­மாக குறைந்த விலைக்கு அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு விற்­ப­தற்குப் பணித்­தார்கள். குறைந்த விலைக்கு காணி­களை விற்­ப­தற்கு மறுத்த முஸ்லிம் குடும்­பங்­களை சுட்டுக் கொன்­றுள்­ளார்கள்.

ஜெனீவா பிரே­ர­ணைக்கு அமை­வாக இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள விசா­ர­ணையில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­பு­க­ளையும், நஷ்­டங்­க­ளையும் அரச அதி­கா­ரி­களும், நிர்­வாக அமை­யங்­களும் தெரி­விக்­க­வுள்­ளன. இவர்கள் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கு ஆத­ர­வா­கவே வாக்கு மூல­ம­ளிப்­பார்கள்.

எந்த அரசும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாக இருந்­தா­லென்ன மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாக இருந்­தா­லென்ன முஸ்­லிம்­களின் காணி பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்க முன்­வந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

உல­மா­ச­பையின் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்களும், இயக்கங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை  மாத்திரம் மையமாகக் கொண்டு கலந்துரையாடல்களை நடத்தாது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஒக்ரோபர் 19, 2015 இல் 11:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: