Lankamuslim.org

One World One Ummah

7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

with one comment

landslide_3நாட்டில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட்ட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிடுகின்றார். மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை தவிர சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பரவலாக மழை பெய்துவருகின்றமையால் மண்மேடுகள் மற்றும் உயர் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2015 இல் 6:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் ஓடையொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டிகடும் மழையின்போது வடிகான் ஒன்றிற்குள் விழுந்த பாடசாலை மாணவி ஒருவர் அதற்குள் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (15) மாலை 6.00 மணியளவில் கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    கண்டி கட்டுகஸ்தோட்டை மடவள வீதியைச் சேர்ந்த மொஹமட் சஹாப்தீன் அஸ்ரா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கண்டி நகரில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆண்டு 9 இல் கல்வி பயிலும்

    இம் மாணவி மேலதிக வகுப்பிற்குச் சென்றுவிட்டு சக மாணவிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடும் மழை காரணமாக பாதையை விட்டு ஒதுங்கியபோது அருகிலிருந்த வடிகானில் மூன்று மாணவிகள் விழுந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்டபோதும் இம்மாணவி வடிகானில் சிக்கியுள்ளார்.

    அயலவர்கள் மிக சிரமத்துடன் அவரை மீட்டபோது உயிரிழந்து காணப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

    மாணவியின் மரணம் தொடர்பாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Imran

    ஒக்ரோபர் 17, 2015 at 1:34 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: