Lankamuslim.org

One World One Ummah

மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ர­வையில் பங்­கேற்பர்

leave a comment »

mithiriமாகாண சபை­களின் முத­ல­மைச்­சர்­க­ளை யும் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்­ச­ரவைக் கூட்டங்­களில் கலந்­து­கொள்ள செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறிசேன கொண்டு வந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார்.

தகு­தி­யற்­ற­வர்கள் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வ­தனை தடுப்­ப­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கை யில், மாகாண சபை­களின் விட­யங்­களை ஆராயும் நோக்கில் அமைச்­ச­ர­வையில் விசேட தீர்­மானம் ஒன்றை எடுத்தோம். அதா­வது மாகாண சபை­களின் முத­ல­மைச் ­சர்­க­ளையும் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ள செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி்­பால சிறி­சேன கொண்டு வந்த இந்த தீர்­மா­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது. அந்­த­வ­கையில் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை மாகாண முத­ல­மைச்­சர்­களும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வார்கள்.

மேலும் பாரா­ளு­மன்­றத்தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள ஆலோ­சனைக் குழுக்­களின் தலை­வர்­க­ளையும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள செய்­ய­வுள்ளோம்.

மேலும் தற்­போது நாட்டில் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வது குறித்து விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. தகு­தி­யற்­ற­வர்கள் பலர் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வது குறித்து குற் றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. எனவே தகு­தி­யற்­ற­வர்கள் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்­து­வ­தனை தடுப்­ப­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. தகு­தி­யா­ன­வர்கள் மட்டும் இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுக்­களை பயன்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

மேலும் அர­சியல் ரீதியில் அநா­தை­க­ளா­கி­யுள்ள சிலர் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என ஒன்றை உரு­வாக்­கிக்­கொண்டு அர­சாங்கம் ஜெனிவா பிரே­ரணை விட­யத்தில் ஏதோ­வொன்றை மறைப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

ஜெனிவா விட­யத்தில் அர­சாங்கம் எத­னையும் மறைக்­க­வில்லை. இந்த பிரே­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­வரும் 23 மற்றும் 24 ஆம் திக­தி­களில் விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்­ன­ரேயே விவாதம் நடத்­தி­யி­ருக்­கலாம். ஆனால் பிர­தமர் ஜப்பான் சென்­றி­ருந்­த­மையின் கார­ண­மாக அதனை வழங்க முடி­யாமல் போனது. எங்­க­ளிடம் மறைப்­ப­தற்கு ஒன்றும் இல்லை.

எனவே அர­சியல் ரீதியில் அநா­தை­க­ளா­கி­யுள்ள சிலர் வங்­கு­ரோத்து அர­சியல் செய்து நாட்டை குழப்ப முற்­ப­டக்­கூ­டாது என்று கூறு­கின்றோம். கேள்வி: ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் வாக்­கு­மூலம் அளிக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க் ஷ மறுத்துள்ளாரே?

பதில்: அது தொடர்பில் நான் தேடிப் பார்த்துவிட்டே கூற முடியும்.

கேள்வி: தகவல் அறியும் சட்டமூலம் என்ன நிலையில் உள்ளது?

பதில்: தகவல் அறியும் சட்ட மூலத்தை மாகாண சபைகளுக்கும் அனுப்பி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. எனவே தற்போது மாகாண சபைக ளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் நிறை வேற்று வோம் என்றார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2015 இல் 7:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: