Lankamuslim.org

One World One Ummah

மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம் !- நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

leave a comment »

mahiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க இணைப்பு-2 தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர்.எதுஎவ்வாறு இருப்பினும் இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.ad

இணைப்பு-2

நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நாளை காலை 09.00 மணிவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆணைக்குழுவின் அமைப்பு பற்றி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த ஆட்சேபனைகளினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஆட்சேபனைகள் குறித்து தீர்மானிக்கும் வரை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2015 இல் 9:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: