Lankamuslim.org

One World One Ummah

உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பு- 7.05 கிராம் முழு விபரம்

leave a comment »

welaபிரபல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனான வெலெ சுதாவுக்கு மரண தண்டனை  விதித்து கொழும்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.ஜனா­தி­பதி தீர்­மா­னிக்கும் திகதி மற்றும் நேரத்தில் வெலிக்கடை சிறைச்­ச­ாலையில் உயிர் பிரியும் வரை வெலே சுதாவை தூக்­கி­லி­டு­மாறு கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடன் வைத்­தி­ருந்­தமை மற்றும் விற்­பனை செய்­தமை ஆகிய குற்றச்சாட்­டுக்­களில் குற்­ற­வா­ளி­யாக

கணப்­பட்­ட­தை­ய­டுத்தே கம்­பொல விதா­னகே சமந்த குமார என்ற வெலே சுதா­வுக்கு இவ்­வாறு மரண தண்­டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதி­மன்றின் 2 ஆம் இலக்க அறையில் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் மேல் நீதி­மன்ற நீதி­பதி பிரீத்தி பத்மன் சுர­சேன இந்த தீர்ப்­பினை அறி­வித்தார்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி கல்­கிசை வித்­தி­யா­லய மாவத்­தையில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் வெலே சுதாவும் அவ­ரது நண்பர் ஒரு­வரும் 7.05 சுத்­த­மான ஹெரோயின் போதைப் பொரு­ளுடன் கைது செய்­யப்­பட்ட நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் மேல் நீதி­மன்றில் வழக்கு தொடரப்­பட்­டது. இந்த வழக்கில் வெலே சுதா­வுக்கும் அவ­ரது நண்­ப­ருக்கும் எதி­ராக மனு­தா­ர­ரான சட்ட மா அதி­பரால் இரு குற்றச் சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் விற்­பனை ஆகி­ய­னவே அந்த குற்றச் சாட்­டுக்­க­ளாகும்.

மேல் நீதி­மன்றில் 5166/10 என்ற இலக்­கத்தில் விசா­ரணை செய்­யப்­பட்டு வந்த இந்த வழக்கில், விளக்­க­ம­றி­யலில் இருந்த போது வெலிக்­கடை சிறைக் கல­வ­ரத்தில் வெலே சுதாவின் நண்பர் உயி­ரி­ழந்த நிலையில், வெலே சுதா­வுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.

எனினும் வெலே சுதா பிணையில் இருந்த போது நாட்டை விட்டு தப்பிச் சென்று சர்­வ­தேச போதைப் பொருள் வலை­ய­மைப்­புடன் தொடர்­பு­பட்டு செயற்­பட்டு வந்த நிலையில் கடந்த ஜன­வரி மாதம் பாகிஸ்­தானில் வைத்து கைது செய்­யப்­பட்டு நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

அதன்­படி கடந்த நாட்­களில் இது தொடர்­பி­லான வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்று நேற்று தீர்ப்­ப­ளிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றின் தீர்ப்பு அறி­விக்­கப்­பட இருந்த இரண்டாம் இலக்க அறையில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. மன்­றினுள் நுழையும் அனை­வரும் விஷேட சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், ஆயுதம் தரித்த பொலி­ஸாரும் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் அந்த அறையை சூழ பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு மேல­தி­க­மாக புல­னாய்வுப் பிரி­வி­னரும் மன்றை சூழ காணப்­பட்­டனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்­று­வரை தடுத்து வைக்­கப்பட்டு விசா­ரணை செய்­யப்­பட்டு வந்த வெலே சுதா நேற்று காலை 9.30 மணி­ய­ளவில் விஷேட பாது­காப்­புக்கு மத்­தியில் மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார்.

இந் நிலையில் நீதிவான் பிரீத்தி பத்மன் சுர­சேன வழக்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்து, நான்கு வழக்­கு­களை ஒத்தி வைத்த பின்னர் வெலே சுதா தொடர்­பி­லான தீர்ப்பு வழங்கும் வழக்கை இறு­தி­யாக விசா­ர­ணைக்கு எடுத்தார்.

இதன்­போது வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் சிரேஷ்ட சட்ட வாதி சுஹர்ஷி ஹேரத் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில் வெலே சுதா சார்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளான சுரங்க பண்­டார,மது­சங்க திய­கஹ ஆகியோர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

இதன்போது வெலே சுதாவை குற்­ற­வா­ளி­யாக அறி­விக்கும் தீர்ப்பை முதலில் நீதிவான் வாசித்தார். அந்த தீர்ப்பில்

முறைப்­பாட்­டாளர் தரப்பில் கம்­பொல விதா­ன­க­மகே சமந்த குமா­ர­வுக்கு எதி­ராக இரு குற்றச் சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 7.05 கிராம் ஹெரோ­யினை உடன் வைத்­தி­ருந்­தமை மற்றும் ஹெரோயின் விற்­பனை ஆகி­ய­னவே அந்த குற்றச் சாட்­டுக்­க­ளாகும். இவ்­விரு குற்றச் சாட்­டுக்­களில் இருந்தும் தான் நிர­ப­ராதி என பிர­தி­வாதி குறிப்­பிட்ட நிலை­யி­லேயே விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

இதனை நிரூ­பிப்­ப­தற்­காக முறைப்­பாட்­டாளர் தரப்பால் 6 சாட்­சி­யங்கள் இந்த மன்றில் சமர்­பிக்­கப்­பட்டு அவை விசா­ர­ணையும் செய்­யப்­பட்­டன.

அதே நேரம் பிர­தி­வா­தியும் சாட்­சி­ய­ம­ளித்த நிலையில் அவரை அரச சட்ட வாதி குறுக்கு கேள்­வி­களைத் தொடுத்து நெறிப்­ப­டுத்­தினார். இந்த சாட்­சி­யங்கள் அனைத்­தையும் இந்த நீதி­மன்றம் ஒப்­பீடு செய்து பார்த்­தது.

அதன்­படி கம்­பொல விதா­ன­க­மகே சமந்த குமா­ரவின் சொத்­துக்கள் தொடர்பில் அரச சட்ட வாதி­யினால் முன்­வைக்­கப்­பட்ட வாதத்தை இந்த மன்று ஏற்­றுக்­கொள்­வ­தாக இல்லை.

எனினும் பொலிஸ் பரி­சோ­தகர் ரண­வீ­ரவின் சாட்­சி­யத்தை இந்த மன்று ஏற்­றுக்­கொள்­கின்­றது.

அதேபோல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரி­சோ­த­கரின் சாட்­சி­யத்தை மன்று விஷே­ட­மாக கரு­து­கின்­றது. அவ­ரது சாட்­சியத்தை மன்று சந்­தே­கங்கள் எது­வு­மின்றி அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­கின்­றது.

அத்­துடன் அதனை உறு­திப்­ப­டுத்தும் வித­மாக உதவி இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ரினால் வழங்­கப்­பட்ட சாட்­சியம், கைப்­பற்றப்­பட்ட ஹெரோயின் சீல் வைத்து சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட அனைத்து நடவ­டிக்­கை­க­ளையும் இந்த மன்று ஏற்­றுக்­கொள்­கின்­றது.

அதன்­படி மன்­றுக்கு முன்­வைக்­கப்பட்ட சாட்­சி­யங்­களின் பிர­காரம் 7.05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடன் வைத்­தி­ருந்­தமை மற்றும் விற்­பனை தொடர்­பி­லான குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் கம்­பொல விதா­னகே சமந்த குமா­ரவை இந்த நீதி­மன்றம் குற்­ற­வ­ளி­யாக அறி­விக்­கின்­றது. என்று நீதிவான் பிரீத்தி பத்மன் சுர­சேன அறிவித்தார்.

அதனையடுத்து தண்­டனை விப­ரங்­களை அறி­விக்க முன்னர் இரு தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் ஏதேனும் கருத்­துக்­களை முன்வைக்க் விரும்­பினால் முன்­வைக்­கு­மாறு நீதிபதி கோரினார்.

அரச சட்டத்தரணி

அதன்­படி முதலில் எழுந்த, அரசின் சிரேஷ்ட சட்ட வாதி பிர­ஹர்ஷா ஹேரத்,

2008.12.04 அன்று 7.05 கிராம் ஹெரோயின் உடன் கைது செய்­யப்­பட்ட இந்த பிர­தி­வா­திக்கு எதி­ரான சாட்­சி­யங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தற்­போது அவர் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் 85/5 பிரிவின் கீழ் இவ­ருக்கு ஆயுள் தண்டனையோ அல்­லது மரண தண்­ட­னையோ வழங்­கப்­ப­டலாம்.

இவ­ருக்­கான தண்­டனை வழங்­கப்­படும் போது அது போதைப் பொருள் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கும் விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கும் ஒரு பாட­மாக இருக்க வேண்டும்.

இந்த குற்­ற­வாளி இலங்­கைக்கு வெளியே சர்­வ­தேச ரீதி­யாக போதைப் பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு நாட்­டுக்குள் போதைப் பொருளை கடத்­தி­யவர் என்­பதை அவரே ஒப்­புக்­கொண்­டுள்ளார். அது தொடர்­பிலும் தக்­வல்கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

எனவே சர்­வ­தேச ரீதி­யாக போதைப் பொருள் வலை­ய­மைப்­புடன் தொடர்­பு­டைய ஒரு­வ­ருக்கு தண்­டனை வழங்கும் போது அந்த தண்­ட­னை­யா­னது தேசிய, சர்­வ­தேச மட்­டங்­களை கருத்­தில்­கொள்­ளப்­படல் வேண்டும்.

தேசிய ஒள­த­டங்கள் அதி­கா­ர­ச­பையின் 2014 ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கையின் பிர­காரம் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்டோர் போதைப் பொருள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு மீட்­கப்­பட முடியாத நிலையில் உள்­ளனர்.

2008 ஆம் ஆண்டின் பின்னர் நட்டில் கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருட்­களில் இவ­ரது பங்­க­ளிப்பு அதி­க­மாகும். இந் நிலையில் இவ­ருக்கு வழங்­கப்­படும் தண்­டனை போதைப் பொருள் பாவனை, விற்­பனை தொடர்பில் சமூ­கத்­துக்கு ஒரு செய்­தியை கூற வேண்டும். சர்­வ­தேச ரீதி­யாக இலங்­கையை போதைப் பொருள் கடத்தல் மத்­திய நிலை­ய­மாக பயன்­ப­டுத்தும், பயன்­ப­டுத்த எத்­த­னிக்கும் நபர்­க­ளுக்கு ஒரு செய்­தியை இவருக்கு வழங்கும் தண்டனை சொல்ல வேண்டும் என தனது தண்­டனை தொடர்­பி­லான கருத்தை அவர் குறிப்­பிட்டார்.

வெலே சுதாவின் சட்டத்தரணி

இத­னை­ய­டுத்து எழுந்த வெலே சுதாவின் சட்­டத்­த­ரணி பண்­டார, எந்த கருத்­தி­னையும் கூற விரும்­ப­வில்லை என கூறிஅமர்ந்தார்.

இத­னை­ய­டுத்து தண்­டனை தொடர்­பி­லான தீர்ப்பை நீதிவான் அறி­விக்க ஆரம்­பித்தார்.

”7.05 கிராம் போதைப் பொருள் பாவனை தொடர்­பிலும் விற்­பனை தொடர்­பிலும் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள இந்த நப­ருக்கு வழங்­கப்­பட வேண்­டிய தண்­டனை குறித்து அரச சட்­ட­வாதி தமது கருத்­தினை தெரி­வித்தார்.

பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி எதி­ரா­கவோ ஆதரவாகவோ எவ்­வித கருத்­தி­னையும் முன்­வைக்­க­வில்லை.

இந் நிலையில் ஹெரோயின் பாவ­னையால், விற்­ப­னையால் தனி நப­ருக்கு, குடும்­பத்­துக்கு, ஒரு ஊருக்கு, ஒரு பிர­தே­சத்­துக்கு, ஒரு சமூ­கத்­துக்கு ஏன் நாட்­டுக்கே ஏற்­படும் பாதிப்­புக்கள் குறித்து நான் அவ­தானம் செலுத்­து­கின்றேன். இது தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள பல தீர்ப்­புக்கள் மீது நான் அவ­தானம் செலுத்­து­கின்றேன்.

எனவே குற்­ற­வா­ளிக்கு வழங்­கப்­படும் தண்­டனை ஏனை­யோ­ருக்கு ஒரு பாட­மாக இருக்­க­வேண்டும். அதன்படி குற்­ற­வியல் தண்­டனை சட்டக் கோவையின் 280 ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கின்றேன்.

என கூறிய நீதி­பதி சுர­சேன, குற்­ற­வா­ளி­யான வெலே சுதாவை நோக்கி, ‘ உமக்கு மரண தண்­டனை வழங்கக் கூடாது என்­ப­தற்கு ஏதேனும் விஷேட கார­ணங்கள் உள்­ளனவா?’ என வின­வினார்.

இதன்­போது குற்­ற­வா­ளிக்­கூண்டில் இருந்­த­வாறு வெலே சுதா நீதி­ப­தியை நோக்கி பேசினார்.

”என்னை கைது செய்யும் போது நான் கல்­கிசை பகு­திக்கு ஒரு வழக்­கிற்கு ஆஜ­ரா­கவே சென்­றிருந்தேன். பொலிஸார் என்னை வாக்கு மூலம் ஒன்றை பெற்­றுக்­கொள்­ளவே கூட்டிச் சென்றனர். இந்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. நான் நிரபராதி. அவ்வளவுதான். என்றார்.

இதனைத் தொடர்ந்து மன்றில் அனைவரும் எழுந்து நிற்க, மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. கதிரையில் இருந்து எழுந்து நின்ற நீதிபதி சுரசேன தீர்ப்பை வாசித்தார். இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி குறிக்கும் திகதி மற்றும் நேரத்தில், குற்றவாளியாக காணப்பட்டுள்ள கம்பொல விதானகமகே சமந்த குமாரவை வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று உத்தரவிடுகின்றது. என தீர்ப்பறிவித்து பேனையை உடைத்தார்.

இந் நிலையில் இதுவரை புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த வெலே சுதா நேற்று பிற்பகல் வைத்திய பரிசோதனைகளுக்கு பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். -VK-எம்.எப்.எம்.பஸீர்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 15, 2015 இல் 6:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: