Lankamuslim.org

One World One Ummah

பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிசு மரணம்! மக்கள் ஆர்ப்பாட்டம்

leave a comment »

7billion baby_260_200பிள்ளை பராமரிப்புநிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 5 மாதங்களும் 10 நாட்களுமான ஆண் சிசு ஒன்று நேற்று மாலை உயிரிழந்துள்ளது.தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பா தோட்டத்திலுள்ள பிள்ளை பராமரிப்பு நிலையத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தோட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் தமது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வது வழமையாகும். சம்பவ தினமான நேற்று காலை குறித்த சிசுவின் தாய், சிசுவை பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.

எனினும், வேலை முடித்து மாலை சிசுவை பார்க்கச் சென்ற போது தொட்டிலில் சிசு இறந்து கிடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சடலம், லிந்துலை ஆதார வைத்தியசாலையில் நேற்று இரவு 7 மணியளவில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பாடல் தலைமை பொலிஸ் அதிகாரி வி.சுந்தரராஜ் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு நிலையத்தின் பராமரிப்பாளர்களின் கவனயீனமே இச்சிசு உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டி, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2015 இல் 1:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: