Lankamuslim.org

One World One Ummah

‘எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’

leave a comment »

mh_17_reconstructedகடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.

இந்த ஏவுகணை விமானத்தின் இடது புறத்தைத் தாக்கி , விமானத்தின் பிற பாகங்களை உடையச் செய்தது என்று இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த சம்பவத்தில் 298 பயணிகள் கொல்லப்பட்டனர்.

ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் இந்த போயிங் 777 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என்று மேலை நாடுகளும், யுக்ரெயினும் கூறுகின்றன.

ஆனால் ரஷ்யாவோ யுக்ரெயின் படைகளே இதைச் செய்ததாகக் கூறுகிறது.

இந்த டச்சு அறிக்கை, யார் இந்த ஏவுகணையை ஏவினர் என்று கூறவில்லை. ஆனால் கிழக்கு யுக்ரெயினின் வான் பரப்பை யுக்ரெயின் மூடியிருக்க வேண்டும் என்று மட்டும் கூறியது. இந்த விபத்து நடந்த நேரத்தில் வேறு மூன்று சிவிலியன் விமானங்கள் அருகே பறந்து கொண்டிருந்தன.

ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த இந்த விமானம், யுக்ரெயின் அரச படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த மோதலின் உச்சகட்டத்தில் விழுந்து நொறுங்கியது.

கொல்லப்பட்டவர்களில் 196 பேர் டச்சு பிரஜைகள், 10 பேர் பிரிட்டிஷ் பிரஜைகள்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த கிரிமினல் விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைக்கவேண்டும் என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட் கோரினார்.இந்த விசாரணை நெதர்லாந்து-ரஷ்யா உறவுகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு முன்னதாக, இந்த ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான, அல்மாஸ் அண்டெவ், இந்த விமானத்தை வீழ்த்திய புக் ரக ஏவுகணையின் குறிப்பிட்ட மாதிரி, இப்போதெல்லாம் ரஷ்யப் படையினரால் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அது யுக்ரெயின் படைகளால் பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் கூறியது.-BBC

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2015 இல் 1:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: