Lankamuslim.org

One World One Ummah

இந்தியாவில் அதிகரிக்கும் ஹிந்துத்துவாவின் மதவன்முறை !!!

leave a comment »

modiஇந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர்.

வலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து , சிவசேனைக் கட்சி, புத்தக வெளியீட்டு விழாவுக்கு எதிராக நடத்த திட்டமிட்டிருந்த போராட்டத்தை ரத்து செய்தது.

ஆனால், சுதீர் குல்கர்னி, இந்த கறுப்பு மையுடனே, பல்வேறு பத்திரிகையாளர் கூட்டங்களில் கலந்துகொண்டார்.பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகரிக்கும் மத வன்முறை

பல இடங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறஸ்தவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதுடன் , பலவந்தமாக முஸ்லிம்களையும் , கிறிஸ்தவர்களையும் ஹிந்துவாக மதம் மாற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன , இந்தியா பூராவும் ஹிந்துத்துவா சிவசேனாக்கள்  மத சிறுபான்மையினரை தாக்கவும் ,கொலை செய்யவும் சிறுவர் ,சிறுமிகள் உட்பட வயது வந்தவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

பல சொந்த கிராமங்களுக்கு முஸ்லிம்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது , அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிகப் படுவதுடன் ,சொத்துக்கள் அழிக்கப்பட்டு படுகொலையும் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது

கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்ற வதந்திகள் காரணமாக, 50 வயது முஸ்லீம் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.சிவசேனைக் கட்சி பாகிஸ்தான பாடகர் குலாம் அலி கலந்துகொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வைத்தது.

கடந்த வாரம் , காஷ்மீரில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், மாட்டிறைச்சி விருந்து கொடுத்த ஒரு சுயேச்சை முஸ்லீம் அரசியல்வாதியைத் தாக்கினர்.சிவசேனை மஹாராஷ்டிர மாநில அரசில் பாஜகவின் கூட்டணிக்கட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனைக் கட்சி 1966ல் தென்னிந்தியாவிலிருந்து மும்பைக்குக் குடியேறும் மக்களுக்கு எதிராக உருவான கட்சியாகும். காலப்போக்கில், இந்தக்கட்சி மத மற்றும் இன வெறியைத் தூண்டும் கட்சியாகவும், சிறுபான்மையினரைக் குறிவைக்கும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2015 இல் 5:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: