Lankamuslim.org

One World One Ummah

அவன்ற் கார்ட் விசாரணை அறிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்க கடற்படை தீர்மானம்

leave a comment »

Avant-Gardeகாலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த அவன்ற் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையின் விசாரணை அறிக்கையை, எதிர்வரும் திங்கட்கிழமை (12) பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்கான ஒத்துழைப்பை கடற்படை வழங்குவதாக இது தொடர்பில் வினவியபோது கடற்பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை கடந்த 5ஆம் திகதி சூடானில் இருந்து இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்தது.

இந்தக் கப்பலின் கெப்டனினால் கப்பல் தொடர்பில் வழங்கப்பட்ட தகவல்கள் போலியானவை என்பதால், குறித்த கப்பலை இராணுவம் பொறுப்பேற்று விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்படைத்தளபதி நேற்று நியூஸ் பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

சுயாதீன குழுவொன்றின் ஊடாக இந்த கப்பல் தொடர்பில் விசேட விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக இன்று இது தொடர்பில் வினவியபோது கடற்படையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இலங்கையின் சமுத்திர வலயம் மற்றும் ஆழ்கடலின் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடற்பாதுகாப்பு சேவையொன்றை வழங்குதல் என்பன கடற்பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பாகும்.

அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையின் விசாரணை நடவடிக்கைகளுக்காக தமது அதிகாரிகளின் ஒத்துழைப்பை தற்போதும் வழங்கி வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் ஜீ.டி.ஏ.எஸ்.விமலதுங்க தெரிவித்தார்.

எனினும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2015 இல் 1:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: