Lankamuslim.org

One World One Ummah

அளுத்கமவில் முப்படையினர், அரச அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு !!!

leave a comment »

aluthgama_vioelnce_muslims_bbsகலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்ஹா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ ஆகிய பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பிய முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு தர்ஹா நகரில் நாளை மறுதினம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது

கடந்த 2014ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்ஹா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ நகரினை மீளக்கட்டியெழுப்பிய இராணுவத்தினர், விமானப் படையினர், கடற்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை மஃரிப் தொழுகையை அடுத்து தர்ஹா நகர், சாவிய வீதியிலுள்ள தெருப் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

அளுத்கம அபிவிருத்தி மன்றத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அளுத்கம அபிவிருத்தி மன்றத்தின் தலைவரான ஹுசைன் சாதீக் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, களுத்துறை மாவட்ட செயலாளர் யூ.டி.சி.ஜயலால், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல, சமயத் தலைவர்கள், பிரதேச பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்ஹா நகர், வெலிப்பென்ன, பேருவளை மற்றும் துந்துவ ஆகிய பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பிய முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் என சுமார் 500 நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

aluthgama_vioelnce_muslims_bbs

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2015 இல் 8:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: