Lankamuslim.org

One World One Ummah

புத்தளம்: சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

leave a comment »

puttalam soyaகரீம் ஏ.மிஸ்காத்: புத்தளம்  நகரில் கடந்த புதன்கிழமை ஆறு வயது பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல்  துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகரில் வெள்ளிக்கிழமை (09) ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவில்,  தரம் 01ல் கல்வி பயிலும், பாதிக்கப்பட்ட சிறுமியான பாத்திமா சபா, தற்போது புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கதிப்பட்ட நிலையில்,   துஷ்பிரயோகத்துக்கு உட்படுதியதாக தெரிவிக்கப்படும் குறித்த ஆட்டோ சாரதி பொலிசாரால் கைது  செய்யப்பட்டு  விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று ஜும்மா தொழுகையின் பின் புத்தளத்தில் குறித்த துஷ்பிரயோகத்தை  கண்டித்தும், நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன் போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை எம். ஜென்ஸிர் கருத்து தெரிவிக்கும் போது. இந்த நாட்டில் உள்ளோர் இனம், மதம்ää மொழி, பிரதேசம் பாராது சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக எதிர்த்து எல்லோரு குரல் கொடுக்க முன்வரவேண்டும். அன்று ஒரு திவ்யா, அதன் பிறகு சேயா, இப்போது என் குழந்தை நாளைக்கு உங்கள் குழந்தையாகவும் இருக்கலாம், எனக்கூறி கண்கலங்கினார்.

மேலும் இவ்வாறான நிலை உங்கள் குழந்தைகளுக்கும் வராமல் இருக்க நீங்களும் என்னோடு இணைந்து ஆதரவு தாருங்கள். காசு தந்து என்னை கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள், எத்தனையோ அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் இருக்கின்றது. இவைகள் எமக்காக குறல் கொடுக்க வேண்டும் என   இறைவனுக்காக நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இனிமேல் இவ்வாறான ஒரு சம்பவம் எந்த சிறுவர்களுக்கும் இடம் பெறக்கூடாது. இதற்காக நான் எனது உயிரையும் கொடுத்து போராட தயாராக உள்ளேன்.

இவ்வாறானவரகளுக்கு ஆதரவாக சட்டதரணிகள் ஆதரவாக செயற்படவேண்டாம் என நான் தயவாக கேற்கிறேன். என அவர் தெரிவித்தார்

puttalam soya puttalam soya 2

Written by lankamuslim

ஒக்ரோபர் 9, 2015 இல் 2:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: