Lankamuslim.org

One World One Ummah

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலிடங்களில்

leave a comment »

pmg ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலிடம் பெற்றுள்ளனர். டபிள்யூ.ஐ.எஸ்.கவிந்யா உனன்தன்ன – 196 – கங்கசிறிபுர வித்தியாலயம், கம்பளை  ஆர்.டபிள்யூ.எம்.கவிஷ்க வணிகசேகர – 196 – மாகுர கனிஸ்ட பாடசாலை, மல்மடுவ      பி.எச்.எல். மெலனி விஜேசிங்க – 196 – ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட பாடசாலை, கேகாலை

இதேவேளை, டி.எம்.ஓஷானி ஹஷ்னிகா கயாசானி, ஜி.கே.நரிந்தியா கௌரி பெரேரா, என்.நிகார மதுஹன்ச, பி.எம்.விஷ்வபதிராஜ் மற்றும் டபிள்யூ.ஏ. துலாஜ் நெதுல் விஜயசேகர ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும் கே.ஜி.சவிந்து அமால், ஏ.ஜே.கமிந்து சஸ்மித மற்றும் எ.பி.ஸி. சஜ்சன் அபேதீர 194 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து தமது மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.

யாழ். புனித பொஸ்கோ பாடசாலையின் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகளை இம்முறை புலமைப்பரிசிலில் பெற்றுள்ளார்.

புத்தளம்  மணல் குன்று முஸ்லிம் பாடசாலை மாணவர் அசார் நிலாம்டீன் 191 புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில்  முதலிடம் பெற்றுள்ளார்

கொழும்பு மாவட்டத்திற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் மோஹனேஸ்வரன் அபிராம் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இவர் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர் என்பதுடன் இதே பாடசாலையைச் சேர்ந்த சக்திவேல் சமேந்திரா மற்றும் வசந்தன் கீர்த்திக் ஆகிய இருவரும் 186 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை முஸ்லிம்  பாடசாலை மாணவி 180 புள்ளிகளை பெற்று தமிழ் மூலம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்
அதேபோன்று ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் யக்கஸ் முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவி பாத்திமா சசீனா தமிழ் மூலம்  167 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2015 இல் 6:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: