Lankamuslim.org

One World One Ummah

சுயாதீன ஆணைக் குழுக்களுக்கு எந்தளவுக்கு சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் உள்வாகப்பட்டுள்ளனர் ?

leave a comment »

gkk19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன 10 சுயாதீன குழுக்களுக்கான சுமார் 500 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது .அரசியல் அமைப்பு சபைக்கு இந்த பரிந்துரை பெயர்கள் கிடைத்துள்ளன. எனினும் சிறுபான்மை சமூகங்களில் இருந்து பிரதிநிதிகள் எந்தளவு தூரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் உடனடியாக அறிய முடியவில்லை

ஏற்கனவே குறித்த குழுக்களுக்கு பெயர்கள் தருமாறு அரசியல் அமைப்பு சபை, தொழில்சார்ந்தோரிடம் கோரியிருந்தது.இதற்கமையவே குறித்த எண்ணிக்கையான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் அரசியல் அமைப்பு சபை, தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு,லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு, வரம்புப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றுக்கு உறுப்பினர்களை நியமிக்கவுள்ளது.

இது எதிர்வரும் 9ஆம் திகதியன்று முடிவுறுத்தப்படவுள்ளது. அரசியல் அமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர்கள்- பாட்டலி சம்பிக்க, விஜயதாஸ ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், குடியியல் உறுப்பினர்கள் ஏ டி ஆரியரட்ன, ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2015 இல் 7:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: