Lankamuslim.org

One World One Ummah

சிறுமி சோயாவை படுகொலை செய்தது யார் ?

leave a comment »

z_p01-Kondayaகொட்டதெனிய சிறுமி சேயா கொலை தொடர்பாகா கொண்டயாவின் சகோதரர்  கைது செய்யப்பட்டுள்ளார் . முன்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கொண்டையா , தனது சகோதரர் சமன் ஜெயலத் சேயாவை கொலை செய்ததாக  பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொண்டயா என்பவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.குறித்த சந்தேக நபர் தாம் கொலையை செய்திருந்ததாக ஒப்புக்கொண்டிருந்தார்.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜெயலத் கொண்டயா என்ற தமது சகோதரரே சேயாவை கொலை செய்தது என, பொலிசாருக்கு தகவல் வழங்கியவர் என தெரிவிக்கப்படுகிறது.  தற்போது  கொண்டயாவின் சகோதரரையும்  .  72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற உத்தரவு வழங்கியுள்ளது

கொண்டயாவின் சகோதரரிடம் நீண்ட விசாரணை செய்த போது முன்னதாக வழங்கிய தகவல்களில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவது அம்பலமாகியுள்ளது.இந்த கொலையுடன் கொண்டயாவின் சகோதரருக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொண்டயாவை காட்டிக் கொடுத்து தாம் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றாரா என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொண்டயாவின் சகோதரரும் விசித்திரமான காம இச்சைகளைக் கொண்டவர் எனவும் பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர் என்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொண்டயாவின் சகோதரர் இன்று மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, உரிய ஆதாரங்களுடன் கொலையாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி சோயாவை படுகொலை செய்தது கொண்டையாவாஅல்லது அவனின் சகோதரனா அல்லது இருவருமா , ? மேலும் யாருக்கு இதில் தொடர்பு உண்டு என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2015 இல் 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: