Lankamuslim.org

One World One Ummah

இலங்கையின் பொறுப்புக்கூறல் விசேடமாக அவதானிக்கப்படல் வேண்டும்

leave a comment »

hroஇலங்கையின் பொறுப்புக் கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தி  சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ஜெனீ­வாவில் கடந்த மூன்று வாரங்­க­ளாக நடந்து வந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொடர் நேற்­று­முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை நிறை­வ­டைந்­தது. இந்தக் கூட்­டத்­தொ­டரின் ஒட்டுமொத்த செயற்­பா­டுகள் குறித்தும், பத்து அமைப்­புகள் இணைந்து கூட்­ட­றிக்கை ஒன்றை வெளியிட்டுள்­ளன. மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்தைச் சேர்ந்த ‘பிலிப் டொம்’ வெளி­யிட்­டுள்ள இந்தக் கூட்­ட­றிக்­கையில்,

இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­க­ளிலும் உறு­தி­யான முடி­வு­களைத் தரு­வ­தற்கு விடாமுயற்சியுடன் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை கண்­கா­ணிப்­ப­திலும் தொடர்ந்தும் தனி­யான கவனம் செலுத்­து­வ­தற்கு ஊக்­க­ம­ளிக்­கிறோம்.

பேர­வையின் தலை­மைத்­துவம், துணிச்சல், உறுதி ஆகி­ய­வற்­றுக்கு இது நல்­ல­தொரு முன்­னு­தா­ர­ண­மாக அமையும் என்றும் அந்தக் கூட்­ட­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், மனித உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச சேவை, ஆட்­டிக்கல் 19, மனித உரி­மைகள் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஆசிய அமைப்பு, மனித உரி­மைகள் கற்­கைக்­கான கெய்ரோ நிறுவகம், சிவிகஸ், ஈஸ்ட் அன்ட் ஹோர்ன் ஆபி­ரிக்க மனித உரி­மைகள் பாது­காப்புத் திட்டம், மனித உரிமைகள் சட்ட நிலையம், மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, சித்திரவதைகளுக்கு எதிராக உலக அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

Written by lankamuslim

ஒக்ரோபர் 4, 2015 இல் 10:41 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: