Lankamuslim.org

One World One Ummah

சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கை ”பேரழிவுக்காக செய்முறை” : ஒபாமா

leave a comment »

whatரஷ்யாவின் பஸார் அல் அசாத்துக்கு ஆதரவான குண்டுத்தாக்குதல்கள் மொஸ்கோவை வெளிவரகடினமான  சுழிக்குல் சிக்கவைத்து விடும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார் அதேவேளை ரஷ்யா  இஸ்லாமிய தேசம் போராளிகளுக்கும் , கூடிய மொடரேட் போராளிகளுக்கும் இடையில் வித்தியாசம் காண்பதில் தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ரஷ்யாவும் , ஈரானும் அசாத்துக்கு முட்டுக் கொடுத்து நிறுத்த முற்படுவதும் மக்களை சமாதானப்படுத்த முயற்சிப்பதும் அவர்களை சுழிக்குல் சிக்கவைத்து விடும் அது வெற்றி தராது எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்  அவர்களின் கண்ணோட்டத்தில், அனைவரும் பயங்கரவாதிகள் இது  ”பேரழிவுக்காக செய்முறையை” : எனவும் எச்சரித்துள்ளார்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப்படும் போராளிகள்  மீது கடந்த புதனன்று சுமார் 20 ஏவுகணை தாக்குதல்களை நடத்தி யதாக ரஷ்ய பாதுகாப்பு அதிகரிகள் அறிவித்துள்ளனர் .எனினும் ரஷ்யாவின் இலக்குகள் சிரிய பசார்  அல் அஸாத்தின் எதிர்த்தரப்பினர் அனைவரையும் உள்ளடகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது அமெரிக்காவும் ஐ.எஸ். போராளிகள் மீது மீது ஈராக் மற்றும் சிரியாவில் வான் தாக்குதல் களை நடத்தி வருகிறது.

எனினும் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், ரஷ்ய போர் விமானங்கள் சி.ஐ.ஏவின் பயிற்சி பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரோ நோக்கம் ஐ.எஸ் இலக்கு வைப்பதாக இருக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக நடப்பது அதுவாக இல்லை” என்றும் கெர்ரி சுட்டிக்காட்டினார். பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜூன் யவெஸ் லே டிரியான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குறிப்பிடும் போது, “உண்மையில், அவர்கள் இஸ்லாமிய தேசம் குழுவின் மீது தாக்குதல் நடத்த வில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யாவின் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு ஒப்பனதாகும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அஷ்டன் காட்டர் எச்சரித்துள்ளார்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சர்வாதிகாரி அசாத் அரசை கவிழ்க்க பல்வேறு போராளி  குழுக்களும் போராடி வருகின்றன.

இதில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அஸாத் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன. மறுபுறம் ரஷ்யா அசாத் அரசு அதிகாரத்தில் நீடிக்க ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை முதல் முறை சிரியாவில் வான் தாக்குதல் நடத்திய ரஷ்யா, ஐ.எஸ்.  குழுவையே இலக்கு வைத்ததாக அந்நாட்டு பாது காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் ரஷ்ய போர் விமானங்கள் சபரானேஹ், ரஸ்தான் மற்றும் தல்பிசெஹ் உட்பட பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 36 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்றும் சிரிய எதிர்த்தரப்பு செயற்பாட் டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று ரஷ்யா தாக்கிய இடங்கள் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் என்று செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.ரஷ்யா தாக்கிய பகுதி தொடர்ந்து போராளிகளுடன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம் என்று தல்பிசெஹ் நகர வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.”பொதுவாக அசா த்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை துரத்துவதே ரஷ்யாவின் நோக்கம்” என்று குடியிருப்பாளர் ஒருவர் பி.பி. சிக்கு குறிப்பிட்டிருந்தார்.

ரஸ்தானில் இருக்கும் மருத்துவர் ஒருவர் ராய் ட்டருக்கு குறிப்பிடும் போது, “நாம் கடந்த ஐந்த ஆண்டு களில் பல்வேறு வகையான ஆயுதங்களையும் கண்டிருகிறோம். ஆனால் இன்று நடந்தது உண்மையில் அதிக மூர்க் கமான மற்றும் விரிவானதுமான வன்முறை யாக அமைந்தது” என்று ரஷ்ய தாக்குதல் பற்றி புதனன்று விபரித்திருந்தார்.

சிரியாவில் இருக்கும் ஆயுததாரிகள் ரஷ்யா உட்பட தமது நாடுகளுக்கு திரும்பும் அச்சுறுத்தலுக்கும் எதிராக ரஷ்யா செயற்படுகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடி குறிப்பிட்டிருந்தார்.

சிரியாவின் அசாத் அரசுக்கு எதிரான போராளிகளுடன் ஆதரவு அளிக்கும் பிரதான நாடான சவூதி அரேபியா, சிரியா மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து தீவிர அவதானத்துடன் இருப்பதாக எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதல்களை ரஷ்யா உடன் நிறுத்த வேண்டும் என்று ஐ.நாவுக் கான சவூதி தூதுவர் அப்துல்லாஹ் அல் முவல்லிமி வலியுறுத்தியுள்ளார். சிரிய அரச தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில் அது ஐ.எஸ்க்கு எதிராக ஒரே நேரத்தில் செயற்பட முயற்சிக்கக் கூடாது என்று அவர் ரஷ்யாவை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரஷ்ய போர் விமானங்கள் மூன்றாவது நாளாக நேற்றைய தினத்திலும் சிரியாவில் குண்டு போட்டுள்ளன. இதில் மூலோபாய ரீதியில் முக்கியம் வாய்ந்த ஜpஸிர் அல் குர் நகர் மற்றும் இத்லிப் மாகாணம், ஹமா மாகாணம் உட்பட தூர தென்பகுதிகள் மீது ரஷ்யா வான் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

 ஜெயிஷ் அல் பதா போராளிகளுடன் அண்மைய மாதங்களில் நாட்டின் தென் மேற்கு பகுதியில் முன்னேற் றம் கண்டு வருகின்றனர். இவர்கள் அரச ஆதரவுபடையிடம் இருந்து இத்லிப் நகரை யும் கைப்பற்றினர்.இந்த கூட்டணியில் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி, குழுவான அஹ்ரார் அல்’ ஷாம் போன்ற போராளிகளுடன் மிதவாத  போராளிகளுடன் அடங்குகின்றனர்.எனினும் இந்த அனைத்து தரப்புகளும் ஐ.எஸ் க்கு எதிராகவும் போராடி வருகின் றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதிய அரசியல் சூழல் சிரியாவின் களத்தில் புதிய பல மாற்றங்களுக்கு வித்திடலாம் என்பதுடன் , அமெரிக்கா – ரஷ்யா என்ற கடுமையான பனிப்போரை ஊக்கிவித்து பிராதியத்தில்  புதிய இராணுவ ,அரசியல் நகர்வுகளுக்கு வழி வகுக்கும் என எதிர்வு கூறலாம்

Written by lankamuslim

ஒக்ரோபர் 3, 2015 இல் 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: