Lankamuslim.org

One World One Ummah

பொது பல சேனா பிக்குகளின் மன்னிப்பு கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

leave a comment »

boகொழும்­பி­லுள்ள கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­டி­டத்­தினுள் சட்டவிரோதமாக உட்பிரவே­சித்து குழப்பம் விளை­வித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் 6 தேரர்­களும் மன்­னிப்பு கோரி வழக்­கினை சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்ள நீதி­மன்றில் விருப்பம் தெரிவித்த போதிலும் நீதிவான் அதனை நிரா­க­ரித்தார்.பிர­தி­வா­தி­க­ளான தேரர்கள் அறு­வரும் குற்றத்தினை ஏற்றுக் கொள்ள வேண்­டு­மெ­னவும் தான் குறை­வான தண்­டனை விதிப்­ப­தா­கவும் நீதிவான் தெரி­வித்தார்.

என்­றாலும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளான பொது­பல­சேனா அமைப்பின் தேரர்கள் இதற்கு இணக்கம் தெரி­விக்­காது தாம் குற்­ற­வா­ளிகள் அல்ல எனத் தெரி­வித்­தனர்.

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­டி­டத்­தினுள் பலாத்­கா­ர­மாக உட்­பி­ர­வே­சித்து குழப்பம் விளை­வித்­த­மைக்கு எதி­ராக பொது­பல சேனா அமைப்பின் 6 தேரர்­க­ளுக்கு எதி­ராக அமைச்சின் செய­லா­ள­ரினால் இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்­றுக்­காலை இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே நீதவான் வழக்கு சமா­தா­ன­மாக தீர்க்­கப்­ப­டு­வதை நிரா­க­ரித்தார்.

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­ட­டத்­தி­னுள் பலாத்­கா­ர­மாக உட்­பி­ர­வே­சித்­தமை, சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்று கூடி­யமை, சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்று கூடிய குழுவில் அங்கம் வகித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் குறிப்­பிட்ட தேரர்கள் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

486ஆம் பிரிவின் கீழான குற்­ற­மான சட்­ட­வி­ரோ­த­மாக அமைச்சின் கட்­டி­டத்­துக்குள் உட்­பி­ர­வே­சித்­த­மையை சமா­தா­ன­மாக நீக்கி கொள்ள முடி­யு­மென்­றாலும் ஏனைய குற்­றங்­களை சமா­தா­ன­மாகத் தீர்த்துக் கொள்ள முடி­யா­தென நீதவான் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் மேல­திக விசா­ரணை எதிர்­வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆர்.ஆர்.டி அமைப்பின் சட்டத்தரணிகளான சிராஸ் நூர்த்தீன், மைத்திரி குணரத்ன மற்றும் சரத் சிறிவர்த்தன ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.-TC

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2015 இல் 9:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: