Lankamuslim.org

One World One Ummah

ஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற சிறப்பம்சம் !!

with one comment

alஐக்கிய நாடுகளின்  சிபாரிசுகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என நேற்று நிறைவேறப்பட்ட அமெரிக்க அமெரிக்க, பிரிட்டன்  முன்நின்று நிறைவேற்றிய தீர்மானத்தின் முதல் பந்தியிலேயே கூறப்பட்டுள்ளமை விசேட அம்சமாக பார்க்கப்படுகிறது ,

அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன 47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் நேற்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.தீர்மானத்தை . இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் ஆதரித்திருக்கிறது.

குறித்த தீர்மானத்துக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தொடர்பாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு பாரிய குற்றங்கள் தொடர்பாக கலப்பு விசேட நீதிமன்றம் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவேண்டுமெனவும், மத சிறுபான்மயினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலும் இனமத வெறுப்பை தூண்டும் பேச்சை குற்றமாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது

இலங்கையில் கடந்த ஆறு மாத காலமாக மத ரீதியான பதற்றங்களும், வன்முறை சம்பவங்களும் குறைந்துள்ள போதிலும் முஸ்லிம் மற்றும் கிரிஸ்துவ சமூகங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஸைத்  அல் ஹுசைன் தெரிவித்திருந்தார் .

அதேவேலை கடந்த 2014 ஜூன் மாதம் அளுத்கம பிரதேச முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பொதுபல சேனா என்ற குழுவுக்கு எதிராக இதுவரைக்கும் எந்த சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்த அவர் மத சகிப்புத் தன்மையை ஊக்குவிக்கவும், வெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக அறிவிப்பதற்கும், வன்முறைகள் தூண்டப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெளிவாக  வலியுறுத்தியிருந்தார்

அதன்பின்னர் நேற்று (1) அமெரிக்க, பிரிட்டன்  முன்நின்று நிறைவேற்றிய தீர்மானத்தின் சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்க பிரேரணையின் வரைபில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு சமர்பிக்கப்பட்டிருந்தது. அந்த மாற்றங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை வலுவிழக்கச் செய்திருப்பதாக பொதுவில் கூறப்பட்டது.

அமெரிக்க பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும் அமெரிக்க தீர்மானத்தில் முதற் பந்தியிலேயே ஐக்கிய நாடுகளின் சிபார்சுகள் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளமை விசேடமானதாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 2, 2015 இல் 8:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் வலியுறுத்திய கருத்துகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் ஐ.நா.வில் பிரதிபலித்துள்ளார் என தென்கிழக்கு முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

  இவ்விடயம் தொடர்பில் அந்த பேரவை இன்று வெள்ளிக்கிழமை (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

  “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெற்ற போது சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை நிலைவரம் தொடர்பிலான Side Event எனும் பிரத்தியேக அமர்வில் அவர் “இலங்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மீது மத, கலாசார ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்” குறித்து உரையாற்றியிருந்தார்.

  இதன்போது பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகள் மற்றும் அவற்றின் பின்னணிகள் குறித்து மிகவும் காட்டமான கருத்துகளை அவர் முன்வைத்திருந்தார். குறிப்பாக பேருவளை, அளுத்கம முஸ்லிம்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தார்.

  அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களை அடக்குவதற்காக அவர்களது பொருளாதார மையங்களை இலக்கு வைத்து அழிப்பதற்கு பொதுபல சேனாவை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அவர் தரவுகளுடன் சுட்டிக்காடி விபரித்திருந்தார்.

  பொதுவாக பொதுபல சேனா உள்ளிட்ட சிங்களப் பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக அனுசரணை வழங்கி வந்தது என்றும் அதனால் அப்பேரின இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகளைக் கூட கட்டுப்படுத்துவதற்கோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  “தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வியக்கங்கள் அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலங்களில் அவை மீண்டும் தலைதூக்கமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை எனவும் ஆகையினால் கடந்த கால சம்பவங்களுக்காக பொது பல சேனா போன்ற இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் எதிர்காலங்களில் அவற்றின் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்ட அவர், இதற்காக இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பலமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என நிஸாம் காரியப்பர் வலியுறுத்தியிருந்தார்.

  இந்த அமரவைத் தொடர்ந்து அதற்குத் தலைமை வகித்த ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுவின் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்டை நிஸாம் காரியப்பர் அவர்கள் பிரத்தியேகமாக சந்தித்து உரையாடியதுடன் நிலைமைகளை நேரடியாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

  இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத ரீதியான நெருக்குவாரங்கள் தொடர்பில் சர்வதேசத்தினதும் ஐ.நா.வினதும் கவனத்தை ஈர்ப்பதற்காக அன்று நிஸாம் காரியப்பர் மேற்கொண்ட இம்முயற்சிகள் வீண் போகவில்லை என்பது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சயீத் அல் ஹுசைன் அவர்கள் நேற்று முன்தினம் ஜெனீவா மாநாட்டில் ஆற்றிய விசேட உரையின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

  அதாவது ஜெனீவாவில் நிஸாம் காரியப்பர் முஸ்லிம்கள் தொடர்பில் எந்தெந்த விடயங்களை குறிப்பிட்டு சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினாரோ அதே விடயங்களை குறிப்பிட்டு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சயீத் அல் ஹுசைன் தனதுரையில் கோடிட்டுக்காட்டி அழுத்தம் கொடுத்துள்ளார். என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

  இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றபோது, இங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தையும் உள்ளடக்கியே தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும் என்பதற்கான அத்திபாரம் இடப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியும்.

  எவ்வாறாயினும் அது இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே நாம் முஸ்லிம் தலைமைகளிடம் விடுக்கும் வேண்டுகோளாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Aslam S.Moulana

  ஒக்ரோபர் 2, 2015 at 10:51 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: