Lankamuslim.org

One World One Ummah

‘வில்பத்து குடியிருப்புக்கள் ‘ சட்டவிரோதமானவை அல்ல : வனப்பாதுகாப்பு திணைக்களம்

leave a comment »

marichu 2நல்லிணக ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு  அமைவாகவே ‘ வில்பத்து’ வனாந்தரப் பகுதி குடியிருப்புகளுக்கு கையளிக்கப்பட்டது .  அங்கு சட்­ட­வி­ரோ­த­மாக காணிகள் கையளிக்­கப்­ப­ட­வில்லை என வனப்­பா­து­காப்பு திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் அநு­ர­அ­து­ரு­சிங்க தெரிவித்துள்ளார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மர நடுகை தொடர்­பாக தெளி­வுப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறியதாவது;
யுத்­தத்தில் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு காணிகள் வழங்­கப்­பட வேண்டும் என நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­விற்கு அழுத்­தங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இதற்­க­மைய நல்­லி­ணக்க ஆணைக்­குழு பரிந்துரைகளை வழங்­கி­யது. யுத்­தத்தின் பின்னர் இடம்­பெ­யர்ந்த மக்கள் வில்­பத்து வனாந்­தி­ரத்தில் சில பிர­தே­சங்­களை சுத்தப்­ப­டுத்தி சட்­ட­வி­ரோ­த­மாக வசிப்­பி­டங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். பின்னர் இதுதொடர்­பாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் ஜனா­தி­பதி செய­லா­ளரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய அவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட காணி­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யான அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே இவை சட்­ட­வி­ரோ­த­மான வசிப்­பி­டங்கள் அல்ல. அதேபோன்று அர­சியல் தலை­யீடுகளும் கிடை­யாது.

ஆனால் இனிமேல் வில்­பத்து வனாந்­தி­ரத்தில் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடமளிக்கப்படமாட்டாது. எதிர்­கா­லத்தில் இலங்­கையின் வனாந்த­ரத்தின் எல்­லைகள் நிர்­ண­யிக்­கப்­படும். எனவே அத்துமீறல்களுக்கும் காடழிப்புக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 29, 2015 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: