Lankamuslim.org

One World One Ummah

கொழும்பு தனியார் வங்கியில் தனியொரு கொள்ளையனினால் 55 இலட்சம் கொள்ளை

leave a comment »

roகொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்துக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் 365நாட்களும் 24 மணிநேரம் செயல்பட்டுவரும் தனியார் வணிக வங்கிக் கிளை­யொன்று நேற்று கொள்ளையிடப் Video  பட்டுள்ளது. இதன்போது வங்­கியில் இருந்த 55 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

மோட்டார் சைக்­கிளில் சாதா­ரண தலைக்­க­வசம்,  ஜக்கட் அணிந்து வந்த தனி கொள்­ளையன் ஒருவன் கைத்­துப்­பாக்­கி­யானால் அச்­சு­றுத்தி நேற்று காலை 7.10 மணிக்கும் 7.20 மணிக்கும் இடையில் இந்த கொள்­ளையில் ஈடு­பட்­டுள்­ள­தா­க பதில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

இச்­சம்­பவம் தொடர்பில் மெலும் அறிய முடி­வ­தா­வது,

நேற்றுக்காலை வழமைப் போன்று வங்கி நடவடிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்ட போது, வங்கி வளா­கத்­துக்குள் மோட்டார் சைக்­கிளில் நபர் ஒருவர் வந்­துள்ளார். கறுப்பு நிற சாதா­ரண தலைக்­க­வசம் அணிந்­தி­ருந்­துள்ள குறித்த நபர் கறுப்பு நிற ஜக்கட் ஒன்­றி­னையும் அணிந்­தி­ருந்­துள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் அந்த வங்­கிக்குள் நுழைய முற்­படும் போது, வாசலில் இருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரை தான் கொண்­டு­வந்த கைத்­துப்­பாக்­கி­யினால் தாக்­கி­யுள்ளார். இதன்­போது அந்த பாது­க­பபு உத்­தி­யோ­கத்­த­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்த மேலும் 3 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் வங்கியின் 8 ஊழி­யர்­களையும் அச்­சு­றுத்­தி­யுள்ள கொள்­ளையன் அவர்கள் அனை­வரும் பார்த்­தி­ருக்க 55 இலட்சம் ரூபா பணத்தை எடுத்­துக்­கொண்டு தான் வந்த அதே மோட்டார் சைக்­கிளில் தப்பிச் சென்­றுள்ளான்.

இத­னை­ய­டுத்து இது தொடர்பில் கொம்­பனி வீதி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­ப­டவே அங்கு விரைந்த பொலிஸார் விச­ார­ணை­களை ஆரம்­பித்­தனர். குறித்த வங்­கியின் கண்­கா­ணிப்பு கம­ராவில் கொள்­ளையின் அனைத்து காட்­சி­களும் தெளி­வாக பதி­வ­கி­யுள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பலித சிறி­வர்­தன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. கொழும்பு மத்­திய தட­ய­வியல் பிரி­வி­னரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலி­ஸாரும் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் மேல­திக விசா­ர­ணை­களும் ஆரம்­ப­மா­கின.

வங்­கியின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்ட அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளி­டமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டன.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக தனது நேரடி கட்­டுப்­பாட்டில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் கைய­ளிக்­கு­மாறு பணித்­துள்ளார். அதன்­படி குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் வெதி­சிங்க மற்றும் அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டீ சில்வா ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர் தப்பிச் சென்ற பாதை வழியே உள்ள பல சீ.சீ.ரி.வி.கமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில் கொள்ளையனைத் தேடிய விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.-

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 இல் 9:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: