Lankamuslim.org

One World One Ummah

மக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் !!

leave a comment »

SHAமுஸ்லிம்களின் இறுதிக் கடமை ,இறுதிப் பயணம் என அறியப்படும் ஹஜ் கடமையில் சவூதி அரேபியாவில் மக்கா நக­ருக்கு வெளி­யி­லுள்ள மினா நகரில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சனநெரி­சல் காரணமாக குறைந்­தது 717 யாத்­தி­ரி­கர்கள் வபாத்தாகியுள்ளனர்  850 இக்கும்   அதி­க­மானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சன­நெ­ரி­சலில் சிக்கி காய­ம­டைந்­த­ வர்­களை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் மீட்புப் பணி­யா­ளர்கள் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­றனர்.காய­ம­டைந்­த­வர்­களை மீட்கும் செயற்­பாட் டில் சுமார் 220 அம்­பியூலன்ஸ் வண்­டிகள் உலங்­கு­வா­னூர்­திகள்  சகி தம் சுமார் 4,000 மீட்புப் பணி­யா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பிய சிவில் பாது­காப்பு பிரிவின் பேச்­சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மான மேற்­படி ஹஜ் யாத்­தி­ரையில் உல­க­மெங்­கு­மி­ருந்து 2 மில்லியனுக்கும் அதி­க­மானோர் பங்­கேற்­றுள்ள நிலையில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்பிடத்­தக்­கது.

ஹஜ்யின்  சாத்­தா­னுக்கு கல் எறியும்  நிகழ்வு நடை­பெற்ற ஜமாரத் பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வில்லை எனவும் 204 ஆம் இலக்க வீதி என்­ற­ழைக்­கப்­படும் வீதி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே மக்­காவில் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்டு வரு­ப­வர்­க­ளுக்கு மேல­திக இட­வ­ச­தியை ஏற்படுத்தித் தரும் முக­மாக விரி­வாக்க நிர்­மாண பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பாரந்­தூக்கி உபகரணமொன்று சரிந்து விழுந்த சம்­ப­வத்தில் 107 பேர் வபாத்தானதுடன்  200 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தி­ருந்­தனர்

ஹஜ் வபாத் சம்­ப­வங்கள்

2006 ஆம் ஆண்டில் மினா­வி­லுள்ள பாலை­வனப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற சன­நெ­ரி­சலில்  360 க்கும் அதி­க­மான யாத்­தி­ரி­கர்கள் வபாத்தை அடைந்தார் அந்த ஆண்டில் ஹஜ் யாத்­தி­ரைகள் ஆரம்­ப­மா­வ­தற்கு முதல் நாள் மக்­கா­வி­லுள்ள பெரிய பள்­ளி­வா­ச­லுக்க அருகில் விடு­தி­யாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த 8 மாடிக் கட்­ட­ட­மொன்று இடிந்து விழுந்­ததில் குறைந்­தது 73 பேர் வபாத் அடைந்தார்

அதற்கு இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஹஜ் வைப­வங்­களின் இறுதி நாளன்று மினாவில் இடம்­பெற்ற சனநெ­ரி­சலில்  குறைந்­தது 244 யாத்­தி­ரி­கர்கள் வபாத் அடைந்தார்  2001 ஆம் ஆண்டில் ஹஜ்இறுதி நாளன்று மினாவில் இடம்பெற்ற சனநெரிசலில் சிக்கி 35 யாத்திரிகர்கள் வபாத் அடைந்தார்

இதுவரை ஹஜ்ஜில் பெரிய உயிரிழப்பாக பார்க்கப்படும்  சம்பவம் 1990 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இதன்போது மக்காவிலுள்ள  பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதையில் இடம்பெற்ற சனநெரிசலில் 1,426 யாத்திரிகர்கள் வபாத் அடைந்தார்

இந்த இறுதிப் கடமைகளின்போது  கொல்லப்பட்ட அனைவரையும் அல்லாஹ் ஏற்றுகொண்டு அவர்களுக்கு அவனது பாதையில் போராடி ஷஹீதாகும் முஜாஹித்களில் உயரிய அந்தஸ்தை வழங்க பிராத்திப்போம்

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 இல் 6:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: