Lankamuslim.org

One World One Ummah

ஏற்கனவே பெண்கள் ,சிறுமிகளை துஷ்பிரயோகப் படுத்திய ‘கொண்டயாவின் ‘ கைது

leave a comment »

arreகொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதம நீதிவான் நேற்று சி. ஐ. டி.யினருக்கு அனுமதி வழங்கினார். இதனடிப்படையில் சி. ஐ. டி.யினர் பிரதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல உண்மைகள் வெளிவந்தி ருப்பதாக பொலிஸ் பதில் பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கொட்டதெனியாவ படல்கம சேயா சதெளமியின் கொலை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் வாக்கு மூலத்திலிருந்து பல உண்மைகள் வெளிவந்திருப்பதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை, இக்கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தே கத்தின் பேரில் ஏற்கனவே கைது செய்ய ப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட இருவர் மீதும் சட்ட வைத்திய அதிகாரி யினால் மேற்கொள்ளப்பட்ட வைத்திய அறிக்கை இன்னமும் வெளிவராததாக சுட்டிக் காட்டிய பதில் பொலிஸ் பேச் சாளர் அறிக்கையினை அடிப்படையாகக்

கொண்டு நீதிமன்றம் அவ்விருவரும் நிரபராதியா? அல்லது இல்லையா என் பது குறித்து தீர்ப்பு வழங்குமென்றும் கூறினார். பிரதான சந்தேக நபர் புதன்கிழமை மாலை கம்பஹா, பெம்முல்ல, பதவத்து கொட பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதி யிலிருந்து பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

இவர் கொண்டயா என அழைக்கப்படும் தினேஷ் பிரியங்கர என்பவராவார். 36 வயதான மேற்படி சந்தேக நபர் திரு மணமாகாதவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மயானத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் மறைந்திருப்பதாக பொதுமக்கள் சி. ஐ. டி. க்கு வழங்கிய தகவலையடுத்து சி. ஐ. டி. யினருடன் மேல் மாகாண பொலிஸ் விசேட குற் றப் புலனாய்வு பிரிவினர் 200 இற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் இணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் சந்தேக நபரை கைதுசெய்தனர்.

பல் துலக்காமல், முகம் கழுவாமல் வன வாழ்க்கை வாழ்ந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட இடத்தில் வெற்று விசுக்கோத்து பக்கற்றுக்களை காணக்கூடிய தாகவிருந்தது.

பிரதான சந்தேக நபரான கொண்டயா குறித்து பெம்முல்ல மக்கள் தெரிவிப்பதா வது:

இவர் கொட்டயா என்னும் பெயரி னாலேயே அழைக்கப்பட்டார். இவர் எப்போதும் கஞ்சா அல்லது மதுபானம் அருந்தி குடிபோதையிலுள்ளவர்.ஏற்கனவே பெம்முல்ல பிரதேசத்தில் இரவு வேளைகளில் உறங்கிக் கொண்டிருந்த 6 வயது மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பின்னர் வயல்வெளியொன்றில் கைவிட்டுச் சென்ற குற்றச்சாட்டிற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.

இவற்றைத் தவிர இரவு வேளைகளில் பெண்கள் நித்திரை செய்வதனை வீடு களுக்குள் திருட்டுத் தனமாக புகுந்து பார்ப்பதனை இந்த கொண்டயா வழக் கமாக கொண்டிருந்தார்.

அத்துடன், மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் சடலத்தையும் இவர் தோண்டி எடுத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கொண்டயாவின் மூத்த சகோதரி, சிறுமி சேயாவின் இருப்பிடத்துக்கு அண்மையிலுள்ள படல்கம கெஹெல்எல்ல என்கமமாருவ என்ற பிரதேசத்திலேயே வசித்து வந்துள்ளார். எனவே இவர் அடிக்கடி தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸார் நடத்திய விசாரணை மூலம் தெரிய வந்தது. சேயாவின் கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் கொண்டயா நீண்ட காலமாக மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்குசென்று வந்துள்ளார்.

சேயாவின் வீட்டுக்கு அருகில் செல் லும் வீதிக்கூடாகவே இவர் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று வந்துள் ளார். அச்சந்தர்ப்பங்களில் இந்நபர் சேயா விளையாடுவதனை நோட்டமிட்டு வைத் திருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமி காணாமற் போனதாக தகவல் வெளியான தினம் முதல் கொண்டயா தனது மூத்த சகோதரியின் வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னர் இதுவரையில் அவர் சகோதரியின் வீட்டுக்கு வரவில்லை.

பொலிஸார் சேயாவின் வீட்டு அயல வரிடம் பெற்ற வாக்குமூலத்திற்கமைய பொலிஸார் இந்நபர் குறித்து தகவலை யும் திரட்டி வைத்திருந்தனர்.

கொண்டயாவின் அக்காவின் வீட்டி லிருந்து 300 மீற்றர் தொலைவிலிருந்தே சேயாவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த கொலைச் சம்பவத்திற்கு பின்னர் கொண்டயா குறித்த காட்டுப் பிரதேசத் திலேயே தலைமறைவாகியிருந்துள்ளார்.

இவர் காட்டுக்குள்ளிருந்த பாழடைந்த வீடு மற்றும் மரங்கள் மீது இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பாரிய குழியொன்றை தோண்டி, அதில் இலை குலைகளை இட்டு மறைத்து அதற்குள் வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் சுமார் 12 தினங்களாக இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது தாயாரே இவருக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்றுள்ளார். அவர் செல்லாத நேரங்களில் அயல்வாசிகளின் வீடுகளிலிருந்து சட்டி பானைகளுடன் இவர் உணவுகளை திருடி வந்து உண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். பிரதான சந்தேக நபர் மேல திக விசாரணைகளுக்காக சி. ஐ. டி. யினரி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.TK

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 இல் 5:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: