Lankamuslim.org

One World One Ummah

இறம்பொடை மண்­ச­ரிவு: ஐவர் பலி. மின்னல் தாக்கம் 3 பேர் பலி

leave a comment »

landslide_3நுவரெலியா இறம்பொடை வெத­முல்ல லில்­லிஸ்லேண்ட் தோட்டத் தொழி­லாளர் குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளிக்­கி­ழமை பிற்­ப­கல் இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் ஐவர் மண்ணில் புதை­யுண்டு பரிதாபகரமாக உயிரிழந் துள்ளனர்.

மண்ணில் புதை­யுண்டு உயிரிழந்த ஐவரில் சிறுமி கள் இருவரும் மூன்று பெண்களும் அடங்குவர்.இதேவேளை, மேலும் ஐவர் மண்­ணுக்குள் புதை­யுண்­டி­ருக்­கலாம் எனவும் உயிரிழந்தவர்களின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் என்றும் அச்சம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதேவேளை, வெதமுல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தமது குழுவினர் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.மண்சரிவு ஏற்பட்ட பகுதியை அண்மித்த பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதா என்பது தொடர்பிலும் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.

அதேவேளை நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான சீரற்ற கால­நி­லை­யினால் இடி, மின்னல் தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்­துக் குள் இரண்டு பெண்கள் உள்­ளிட்ட 3 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

தொடர்ந்தும் நாட்டில் பல்­வேறு பகு­தி­களிலும்சீரற்ற கால­நி­லை­யும் இடி மின்னல் தாக்கங்க ளும் காணப்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்படு வதனால் பொது மக்கள் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் காலநிலை அவதான நிலையம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 25, 2015 இல் 5:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: