Lankamuslim.org

One World One Ummah

”முஸ்லிம் அரசியல் வாதிகளின்” ,,,,,,,,,,,,,,,,,வெளிவருகிறது !!!

leave a comment »

MUமத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தனது மனைவியைக் கடத்தி பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இது குறித்து அறிவிக்க இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், அசாத் சாலியின் மகளும் மனைவியும் தமக்கு வழங்கிய தகவலுக்கேற்ப நாவலயில் உள்ள அவரது இல்லத்தில் தனது மனைவி தங்கியிருப்பதாக அறிந்து அங்கு தாம் சென்றதாகவும் அவர் அங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போதே தமக்குள் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின் இரு குடும்பங்களும் அன்யோன்யமாகப் பழகி வந்ததாகவும் மேலும் தெரிவித்த அவர் அசாத் சாலி தமது மனைவியுடன் ‘தொடர்பு’ வைத்திருந்ததாகவும் அங்கு தெரிவித்தார். இவ்வாறானவர், இன்னொரு குடும்பத்தைக் குழைத்து நடு வீதிக்குக் கொண்டு வரும் செயலிலும் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் மேலும் கவலை வெளியிட்டதோடு கண்டி மக்கள் இதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டுமென தெரிவித்தார்.

தமக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் உவைஸ் ஹாஜியார் தெரிவித்ததோடு அங்கு கருத்து வெளியிட்ட அவரது மகன், தனது தந்தைக்கும் குடும்பத்துக்கும் இழுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் , தமது குடும்பம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பிலும் இரு வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் அதேவேளை, அசாத் சாலி தன்னைப் பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதாக தனது மனைவி தொலைபேசி அழைப்பு  மூலம் தெரிவித்ததாக உவைஸ் ஹாஜியார் இன்று மீண்டும்
தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர், நாவலயில் சர்ச்சை இடம்பெற்றதைத் தொடர்ந்து, திருமதி உவைசிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அதன்போது அவர், தான் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், தாமாக விரும்பியே வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தம்மை யாரும் பலவந்தப்படுத்தவோ, தடுத்து வைக்கவோ இல்லையெனவும் தெரிவித்ததாகவும் அதனடிப்படையில் நாவலயில் கூடிய உவைஸ் ஹாஜியாரின் குடும்பத்தினர் கலைந்து சென்றதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஊடகங்களின் கவனத்திற்கு வந்திருக்கும் இவ்விரு குடும்பங்களினதும் விவகாரத்தைப் பொறுத்தவரை இது வானத்தைப் பார்த்துத் தாமே உமிழ்ந்து கொள்ளும் செயல் என சுட்டிக்காட்டியுள்ள இரு குடும்பத்தோடும் தொடர்புள்ள சமூக ஆர்வலர்கள், கடந்த சில மாதங்களாகவே இடம்பெற்று வந்த குடும்ப முறுகல் “தற்போது” அம்பலத்துக்கு வந்துள்ளதாகவும், இது சமூகத்துக்கும், இரு தரப்புக்கும் தலைகுனிவானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனக்குத் துரோகமிழைக்கப் பட்டிருப்பதாகவும் உவைஸ் ஹாஜியார் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தமையும் தாம் யாரையும் கடத்தவோ, பலவந்தமாதகத் தடுத்து வைக்கவோ இல்லையென அசாத் சாலி மறுதலித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அஸ்ரப் ஏ சமத்

Written by lankamuslim

செப்ரெம்பர் 22, 2015 இல் 5:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: