தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு
கொஸ்கொட, மஹபெலெஸ்ஸ பகுதியில் தந்தையினால் கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சடலம் கொஸ்கொட கரையோரத்திற்கு அடித்து வரப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தனது மனைவி மற்றும் குழந்தையை கடலில் தள்ளிய நபர் கையாவல பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையை நேற்று முன்தினம் (17) இரவு கடலில் தள்ளியதுடன், மனைவி காப்பாற்றப்பட்டிருந்தார்.
சம்பவத்தில் உயிர்தப்பிய 28 வயதான பெண் தற்போது பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஒரு வருடம் 11 மாதங்கள் நிரம்பிய குழந்தையே கடலில் தள்ளிவிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்