Lankamuslim.org

One World One Ummah

கொட்டதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் போதைக்கு அடிமையான மாணவன் கைது

leave a comment »

childகொட்ட தெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி கடத்திச் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17வயதான பாடசாலை மாணவன் ஒருவனும் தடுத்து வைத்து விசாரணை செய்யபடுவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். எனவும் தெரிவிக்கப்படுகிறது எனினும் கைது தொடர்பில் போலிஸ் தகவல்கள் எதையும் அறிய முடியவில்லைகொட்டதெனியாவ அங்கரங்கஹா பிரதேசத்தை சேர்ந்த 5 வயதான சேயா என்ற சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் மூவரில் ஒருவர் பாடசாலை மாணவன், எனவும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப நண்பர் எனவும் அவர் கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் வணிகப் பிரிவில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் தடுத்து வைத்து  தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப் படுகிறது .

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2015 இல் 6:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: