Lankamuslim.org

One World One Ummah

வழக்குகள் புறந்தள்ளப்படுவதற்கு சட்டமா அதிபர்களே பிரதான காரணமாகும் !! : ராஜித

with one comment

Rajithaநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ராஜபக்ஷவினரின் கும்பல் அரச நிறுவங்களில் சட்டமா அதிபர்களாக இன்றும் நிலைந்து நிற்கின்றன  இது தொடர்பில் நான் அமைச்­ச­ர­வையில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளேன். இதனை சர்வ சாதா­ர­ண­மாக எண்ணக் கூடாது   என சுகா­தார அமைச்­சரும் அமைச்சரவை பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்துள்ளார் .

எவன் கார்ட் உள்­ளிட்ட மிகவும் பார­தூ­ர­மான மோச­டி­களை நாம் அமைச்­ச­ர­வையில் இருக்கும் வரையில் எவ­ராலும் மூடி மறைக்க முடி­யாது நாட்டு மக்கள் பயப்­படத் தேவை­யில்லை. காலம் கடந்­தா­வது குற்றவா­ளி­களை நாம் கைது செய்வோம் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

அமைச்­ச­ர­வையின் முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது எவன் கார்ட் ஆயுத பரி­மாற்றம் உள்ளிட்ட மிகவும் பார­தூ­ர­மான வழக்கு புறந்­தள்­ளப்­பட்டு வருகின்­றது. நாட்டில் சுயா­தீ­ன­மான நீதிமன்றத்­திற்கு வாய்ப்பு வழங்­கினால் அதனூ­டாக மோசடிக்காரர்கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றான வழக்­குகள் புறந்­தள்­ளப்­ப­டு­வ­தற்கு சட்­டமா அதி­பர்­களே பிர­தான கார­ண­மாகும். சுயாதீனமான நீதி­மன்ற கட்­ட­மைப்­பினை மீறி பக்­கச்­சார்­பான முறையில் செயற்­ப­டு­கின்­றனர்.

எவன் கார்ட் உள்­ளிட்ட மிகவும் பார­தூ­ர­மான மோச­டி­களை நாம் அமைச்­ச­ர­வையில் இருக்கும் வரையில் எவ­ராலும் மூடி மறைக்க முடி­யாது. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டாலும் ராஜ­ப­க் ஷ­வி­னரின் கும்பல் அரச நிறு­வ­னங்­களில் நீதி­ப­தி­க­ளாக இன்றும் நிலைத்து நிற்­கின்­றனர். இது தொடர்பில் நான் அமைச்சரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளேன். இதனை சர்வ சாதாரணமாக எண்ணக் கூடாது.

நாட்டு மக்களுக்கு பயப்பட தேவை யில்லை. காலம் கடந்தாவது குற்றவாளிகளை நாம் கைது செய்வோம் என்றார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 18, 2015 இல் 6:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. இலங்கையில் கடந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட ரக்ன லங்கா என்ற பாதுகாப்பு நிறுவனமொன்றுக்கு ஆயுதங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, ஊழல் விவகாரங்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

  அந்த ஆணைக் குழு முன்பாக சாட்சியளித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கூடுதல் செயலாளர் தமயந்தி ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கிவந்த ரக்ன லங்கா நிறுவனத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான 3,473 ஆயுதங்கள் வழங்கப் பட்டிருந்ததாக ஆணைக் குழு முன்பு தெரிவிக்கப்பட்டது.

  அதில் 89 ஆயுதங்கள் மாத்திரமே சட்டபூர்வமாக அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக தனது சாட்சியத்தில் தமயந்தி ஜயரத்ன கூறினார்.

  இதேவேளையில், வாக்குமூலமொன்றை அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக் குழு முன்பு ஆஜரானார்.

  கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ரக்ன லங்கா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Imran

  செப்ரெம்பர் 19, 2015 at 12:30 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: