Lankamuslim.org

One World One Ummah

அல் அக்ஸா மஸ்ஜித்தின் மீது எரியூட்டல், அங்கு யூத கோவிலையும் நிர்மாணிக்க முயற்சி !!

leave a comment »

qஏ.அப்துல்லாஹ்: அல் அக்ஸா மஸ்ஜித்துக்குள்   அத்துமீறி நுழைந்து யூத வணக்க வழிபாடுகளில் ஈடுபடமுயலும் யூத தீவிரவாத குடியேறிகளுக்கு   பாதுகாப்பு வழங்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை   மஸ்ஜித்துக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தி பலரை படுகாயப்படுதியுள்ளதுடன்  மஸ்ஜித்தின் பகுதியையும் எரியூட்டியுள்ளது , இவை அங்கு நிலைமையை மேலும்  மோசமாக்கி வருவதுடன் முஸ்லிம் உம்மாவை ஆத்திரமூட்டியுள்ளது .

3 அல் அக்ஸா மஸ்ஜித்துக்குள் யூத கோவில் ஒன்றை கட்ட தீவிரவாத யூத அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை மோதலை தீவிரப்படுத்தியுள்ளது  இந்த தீவிரவாத யூதர்கள் பாதுகாப்பாக மஸ்ஜித் வளாகத்துக்குள் அத்துமீறி  நுழைய ஆக்கிரமிப்பு இஸ்ரேலின்  படைகள் பாதுகாப்பு வழங்க்குவதுடன் மஸ்ஜித் மீதும் தாக்குதல் நடாத்தி வருகின்றமை நிலைமயை மேலும்  ஆபத்தான கட்டம் நோக்கி நகர்த்தி வருகிறது.

ஆக்கிரமிப்பு படை தனது பூட்ஸ் கால்களுடன் மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன்  தொழுகை விரிப்புக்கு மேலால் நடந்து  சலடீன் மிம்பர் பக்கம் வந்து தாக்குதல் நடாத்தியுள்ளது  ஆக்கிரமிப்பு படையின் ஏறிகுண்டு  தாக்குதலில் அல் அக்ஸா மஸ்ஜித்தின்  தெற்கு  வாயில் கதவு தீப்பற்றி எரிந்துள்ளது. .

ஜெருசலம் அல் அக்ஸா மஸ்ஜித்துக்குள்  அத்துமீறி நுழைந்த  ஆக்கிரமிப்பு இஸ்ரலிய படைக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக மூன்றாவது நானாகவும் இந்த மோதல்கள் இடம்பெற்றுகின்றது , முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் , மூன்றாவது புனிதத் தலமுமான அல் அக்ஸா மஸ்ஜித்தின் உள்புறமும் மேல் புறமுமாக ஆகிரமிப்புபடை புகுந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

hiஆக்கிரமிப்பு  இஸ்ரேலிய படை   மஸ்ஜித்துக்குள், அதர்ச்சி குண்டு தாக்குதல்கள் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது  .தாக்குதல் நடாத்தும் ஆக்கிரமிப்பு படையை எதிர்த்து  மஸ்ஜித்தை பாதுகாக்க  பலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீப்பந்தங்களை  பயன்படுத்தி போராடி வருகின்றனர்

நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட மோதலில் 17 பலஸ்தீனர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருக்கும் ஜெருசலம் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சுலைமான் அஹமத் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். “மஸ்ஜித்தின்  கூரையில் அவர்கள் ஸ்னைப்பர் தாரிகளை நிறுத்தியிருப்ப தோடு ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்து கின்றனர்” என்று அஹமத் தெரிவித்துள்ளார்

நேற்று காலை 6.30 மணி அளவில் மீண்டும் மஸ்ஜித் வளாகத்திற்குள் நுழைந்திருக்கும் ஆக்கிரமிப்பு  படை அங்கு நிலைகொண்டு  தென் பகுதி மஸ்ஜிதுக்குள் அடாவடியாக நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது .இதனிடையே அல் அக்ஸா வளாகத்தின் ஹத்தா வாயிலைத் தவிர்த்து அனைத்து வாயில் களையும் மூடியிருக்கும் இஸ்ரேல் படையினர் பலஸ்தீனர்கள் உள்ளே நுழையவும் மறுத்துள்ளது,

2யூத  ஆக்கிரமிப்பு குடியேறிகள் தமது புத்தாண்டை மஸ்ஜித்துக்குள்ள  நுழைந்து  ஆடி, பாடி  கைகொட்டி கொண்டாட முயற்சிக்கும் வேளையிலேயே  மஸ்ஜித்  வளாகத்திற்குள் புதிய  மோதல் ஏற்பட்டுள்ளது . யூதர்கள்  மஸ்ஜித்  வளாகத்தில் நுழைய இஸ்ரேல் ஆக்கிரமிப்பு  படை பாதுகாப்பு வழங்கி வருகிறது

இது இப்படி இருக்க இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் !!! என்று தற்போதைய பதற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்கா வலியு றுத்தி இருப்பதோடு இஸ்ரேலின் அத்துமீறல் குறித்து ஜோர்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கைக்கு அமைய ஜெரூசலத்தில் இருக்கும் முஸ்லிம் புனிதத் தலங்களுக்கு ஜோர்தான் அரசே பாதுகாவலராக உள்ளது.

மஸ்ஜித்  வளாகத்திற்குள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மூலம் அது முழு முஸ்லிம் உலகத்தையும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக பலஸ்தீன விடுதலை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மஸ்ஜித்  வளாகத்தின்   மேலும் இஸ்ரேலிய படை குவிப்பை மேற்கொள்ள வேண்டும் என தீவிர வலதுசாரி யூத அமைப்புக்கள்  அழுத்தம் கொடுத்து வருவதோடு அங்கு யூத கோவில் ஒன்றையும் நிறுவ தொடராக முயற்சித்து வருகின்றன

4

.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2015 இல் 8:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: