Lankamuslim.org

One World One Ummah

புத்தளம் மாவட்ட உள்ளூராச்சி எல்லை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்யவும்

leave a comment »

Puttalam_உள்ளூராச்சி மன்றத்தேர்தல்கள் தொகுதி வாரியாக நடத்தப்படல்வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியான நிலைபாட்டில் உள்ளார். இந்­நி­லையில் புத்­தளம் மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி எல்­லைகள் நிர்ணயம் செய்­யப்­பட்­டுள்ள போதிலும் சிறு­பான்மை முஸ்­லிம்கள் மற்றும் தமி­ழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பிர­தே­சங்கள் தொகு­தி­க­ளாக நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்ள விதம் குறித்து மறுபரி­சீ­லனை செய்­யப்­பட வேண்டும் என புத்­தளம் நகர சபை முன்னாள் உறுப்­பினர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்சி உள்­ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சர் மனோ கணேசன் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்டிக்காட்­டி­யுள்ளார்.

அக் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­ப­ட்டுள்­ள­தா­­வது,

தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த எல்லை நிர்­ணயம் முஸ்­லிம்­களும் , தமி­ழர்­களும் தமது பிரதிநிதித்­து­வங்­களை உறுதி செய்­வதில் அசாத்­தி­ய­மான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறிப்­பாக கற்­பிட்டிப் பிர­தேச சபை மற்றும் ஆராச்சிக்­கட்டு பிர­தேச சபை முத­லிய பிரி­வு­களில் இந்த நிலைமை தெளி­வாக உண­ரப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக கற்­பிட்டிப் பிர­தேச சபைக்கு சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலை­வ­ராக தெரி­வாகும் சந்­தர்ப்­பத்தை தட்டிப் பறிக்கும் வகையில் எல்லை நிர்­ணய செயற்­பாடு அமைந்­துள்­ள­தாக நியா­ய­மான அச்சம் மக்கள் மத்­தியில் தோன்­றி­யுள்­ளது.

மேலும் ஆராச்­சிக்­கட்டு பிர­தேச சபை பிரிவில் தமிழ் பிர­தி­நி­தித்­துவம் ஒன்­றுக்கு மேற்­பட்ட ரீதியில் தெரிவாகும் நிலையில் இருந்தும் ஒரு­வ­ருடன் மட்­டுப்­ப­டுத்தும் வகையில் எல்லை நிர்­ணயம் கையாளப்பட்­டுள்­ளது என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். எனவே இது விடயத்தில் நியாயம் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பாக வேண்டுகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 இல் 6:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: