Lankamuslim.org

One World One Ummah

ஜனாதிபதி மைத்திரியின் பார்வையில் அனாகரிக்க தர்மபால !!!- புதிய புரிதல்

with one comment

my3கெட்ட குணமுள்ள ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக் கூட உறங்கமாட்டேன் என அன்று ஆனகாரிக்க தர்மபால தெரிவித்தார் ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளே இவ்வாறான கருத்திதை வெளியிடும் நிலைமையை ஏற்படுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

இன்று சில அடிப்­ப­டை­வாத தேசப்­பற்­றா­ளர்கள் அந­கா­ரிக தர்­ம­பா­லவை இன­வா­தி­யாக சித்­த­ிரிக்க முயல்கின்­றனர். இதனை எதிர்க்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.ஸ்ரீமத் அந­க­ாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்­னிட்டு நேற்று திங்­கட்­கி­ழமை பன்­னிப்­பிட்­டிய தர்­ம­பால வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,சிங்­க­ள­வர்கள் தமது இனத்தை கட்­டி­யெ­ழுப்­பிக்­கொண்டு எவ்­வாறு முன்­னோக்கிப் பய­ணிப்­பது என்­பதை அந­கா­ரிக தர்­ம­பால தெளி­வு­ப­டுத்­தினார்.

பௌத்த சிந்­த­னைக்குள் தேசி­யத்தை மதித்து ஒரு­பக்கம் தேசிய தொழிற்றுறையை தேசிய உற்பத்திகளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தோடு மறு­புறம் சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்­வ­தற்கும் தேசிய முக்­கி­யத்துவத்தை கருத்தில் கொண்டு நாட்டில் அனைத்து பிள்­ளை­களும் சிங்­கள மொழியில் தேர்ச்சி பெறு­வதைப் போன்று ஆங்­கிலம், தமிழ் மொழி­க­ளிலும் தேர்ச்சி பெற­வேண்­டு­மென்றார்.

ஆனால் அன்­றைய கால­கட்­டத்தின் சில அடிப்­ப­டை­வா­திகள் அவரை சிங்­கள இனத்­துக்காக குரல் கொடுத்த வீரர் என வெளிப்­ப­டுத்த முயற்­சித்­தனர்.இதனை நான் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன். இன்று சில தேசப்­பற்­றா­ளர்கள் அடிப்­ப­டை­வா­திகள் பிழை­யான அர்த்­தத்தை கற்­பிக்­கின்­றனர்.அந­க­ாரிக தர்­ம­பால இனவா­தி­யல்ல. நாட்டை, தேசி­யத்தை, மக்­களை நேசித்­தவர். அனை­வரும் ஒற்­று­மை­யாக நாட்டை எப்­படி முன்­னேற்­று­வது என்ற சிந்­தனை கொண்­டவர்.

ஆனால் அவ­ரது தேசிய சிந்­த­னை­களை நிறை­வேற்ற அவரால் முடி­யாது போனது. அதற்கு முட்டுக்கட்டைகள் போடப்­பட்­டன. எனவே மனம் நொந்து போன அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தியாவுக்கு சென்றார்.

அப்­போது இவ்­வா­றா­ன­தொரு கருத்தை வெளி­யிட்டார். கெட்­ட ­கு­ண­முள்ள ஒழுக்­க­மற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலை வைத்துக் கூட உறங்கமாட்டேன் எனக் கூறினார்.இதற்குக் காரணம் அவர் எதிர் பார்த்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே தான் மனம் நொந்து இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்றும் ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 15, 2015 இல் 11:49 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந­கா­ரிக தர­்ம­பா­லவின் போராட்ட வடி­வங்கள் தொடர்பில் அறி­யா­தவர் என்ற வகையில் மக்கள் மத்­தியில் அவரை பற்­றிய தவ­றான எண்­ணங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தையும் உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­களை வெளியி­டு­வ­தையும் உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என பெங்­க­முவே நாலக தேரர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

    அந­கா­ரிக தர்­ம­பால நாட்டின் சிங்­கள மக்­களின் உரி­மை­க­ளுக்­காக மட்­டுமே போராட்டம் நடத்­தினார் அவரின் போராட்­டங்கள் தொடர்­பபான அடிப்­படை அறி­வில்­லாத ஒரு­வரை நாட்டின் தலை­வ­ராக தாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

    நாரே­ஹேன்­பிட்டி அப­ய­ராம விஹாரை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை நடைபெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

    பம்­ப­ல­ப்பிட்டி தர்­ம­பால கல்லூ­ரியில் இடம் பெற்ற அந­கா­ரிக தர்­ம­பா­லவின் 151 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்­து கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிங்­கள அடிப்­ப­டை­வா­திகள் அந­கா­ரிக தர்­ம­பா­லவை இன­வா­தி­யாக சித்­த­ரிக்க முயற்­சிக்­கின்­றனர். என தெரி­வித்­தி­ருந்தார்.

    ஆனால் எவரும் அவ்­வாறு செய்­த­தில்லை ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கு அநக­ாரிக தர்­ம­பால தொடர்பில் போதிய அறிவு இன்­மை­யி­னா­லேயே அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அந­கா­ரிக தர்­ம­பால ஒரு­போதும் நாட்டில் மூவின மக்­க­ளுக்­கா­கவும் போராட்டம் நடத்­த­வில்லை மாறாக அவர் சிங்­கள மக்­க­ளுக்­காக மாத்­தி­ரமே போராட்டம் நடத்­தினார். அவர் போராட்ட வடி­வங்கள் அனைத்தும் சிங்­கள மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­பதை மாத்­தி­ரமே நோக்­காகக் கொண்­டி­ருந்­தன.

    அவர் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளியிடும் கருத்­துக்கள் உண்­மைக்கு புறம்­பா­னது. அவர் உட­ன­டி­யாக இவ்­வா­றான விஷ­மத்­த­ன­மா­ன செயற்­பா­டு­களை நிறுத்த வேண்டும் என்று நான் எச்­ச­ரிக்கை விடுக்­கின்ற அதே­வேளை நாட்டின் மக்கள் உரி­மைக்­காக போரா­டிய ஒருவர் தொடர்பில் அறிந்­தி­ரா­தவர் என்­பதால் அவரை ஜனா­தி­ப­தி­யா­கவும் நான் ஒரு­போதும் ஏற்­றுககொள்ளப்போவதில்லை.

    அந­கா­ரிக தர்­ம­பால சிங்­கள மக்­க­ளுக்­காக போராட்டம் நடத்­தினார் என்­பதை ஆதா­ரத்­துடன் உறு­திப்­ப­டுத்த முடியும் ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெறும் வாய் வார்த்­தை­யாக மட்­டுமே அதனை கூறு­கிறார் தமது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அதனை மக்கள் மத்­தி­யிலும் பரவச் செய்ய முயற்­சிக்­கிறார்.

    அந­கா­ரிக தர்­ம­பால உள்­ளிட்ட பலரும் போராட்டம் செய்து நாம் பாது­காத்­துக்­கொண்ட உரி­மை­களை மீள கொடுக்க முடி­யாது. சிங்­கள மக்கள் தேசிய இன­மாக வாழும் இந்­நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கும் மனி­தா­பி­மான முறையில் இடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

    மறு­புறம் மனித உரிமை தொடர்பில் பாரிய குழப்ப நிலை தோன்­றி­யுள்­ளது.இந்த நாட்டில் யுத்தத்தை வென்றவர்களை நமது தலைவர்களை தண்டிப்பதற்கு பெயர் சர்வதேச விசாரணை அல்ல.நாட்டை காக்கும் தலைவர்களுக்கு பதிலாக தற்போதுநாடடை காட்டிக்கொடுக்கும் தலைவர்களே உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறா செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் மக்களோடு கைகோர்த்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

    abdul Rashed

    செப்ரெம்பர் 17, 2015 at 1:22 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: