Lankamuslim.org

One World One Ummah

ஐநா மனித உரிமை அவையில் நடக்கப்போவது என்ன ??

leave a comment »

UNஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இன்­றைய தினம் பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ள மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை விவ­காரம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டை அறிவிக்கவுள்ளார்.

அதாவது உள்ளகவிசாரணை நடத்தப்படவேண்டுமா அல்லது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் இன்று அறிவிப்பார்.

பெரும்­பாலும் இலங்­கையில் இடம்­பெற்றுள்­ள­தாகக் கூறப்­படும் (இனம் மற்றும் மதம் சார்ந்த) மனிதஉரிமை மீறல்கள் விவ­காரம் தொடர்பில் அவர் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை கோர­மாட்டார் என்றும் உள்­ளக விசா­ரணை பொறி­முறையை முன்­னெ­டுக்க இலங்­கைக்கு காலஅவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­த­னையே வலி­யு­றுத்­துவார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை

இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­ள­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இன்­றைய தினம்
மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரின் முத­லா­வது அமர்­வி­லேயே உரை­யாற்­ற­வுள்ளார்.

இந்த உரை­யின்­போது இலங்கை மீது சுமத்­தப்­பட்­டுள்ள போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் இல்லை என்றும் தமது அர­சாங்கம் விரைவில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை ஆரம்­பிக்கும் என்றும் உறு­தி­ய­ளிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம்

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை குறித்து நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை இர­க­சிய ஆவ­ண­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த அறிக்கை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சில தினங்­களில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

கடும் குற்­றச்­சாட்­டுக்கள்

அந்த அறிக்கையில் அர­சாங்கப் படைகள் மற்றும் புலிகள் மீது கடும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்களின் பெயர் விப­ரங்கள் எதுவும் அறிக்­கையில் வெளி­யி­டப்­ப­ட­வில்­லை­யென்றும் எனினும் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐந்து தினங்­களில் பதில் அர­சாங்­கத்தின் பதில்

அவ்­வாறு மனித உரிமை பேர­வையில் விசா­ரணை அறிக்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­படும் வரை இலங்­கைக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள விசா­ரணை அறிக்கை இர­க­சி­ய­மா­கவே வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதா­வது அறிக்கை ஜனா­தி­ப­திக்கு கிடைத்து ஐந்து தினங்­க­ளுக்குள் அதற்கு அர­சாங்­கத்தின் சார்பில் பதில் அளிக்­கப்­பட்ட பின்னர் அறிக்கை ஜெனி­வாவில் வெளி­யி­டப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

TNA சட்ட வல்­லுநர் குழு­வொன்று ஜெனிவா நோக்கி பய­ண­மா­கி­யுள்­ளது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனின் முக்­கிய கடி­தத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தலை­மை­யி­ லான சட்ட வல்­லுநர் குழு­வொன்று ஜெனிவா நோக்கி பய­ண­மா­கி­யுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 30ஆவது கூட்­டத்­தொடர் இன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் சட்ட வல்­லு­னர்கள் குழு நேற்று முன்­தினம் ஜெனிவா விரைந்­துள்­ளது.

30 ஆம் திகதி விவாதம்

அத்­துடன் எதிர்­வரும் 30 ஆம் திகதி இந்த அறிக்கை மீதான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த விவா­தத்தை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆரம்­பித்து வைக்­க­வுள்­ள­துடன் அமெ­ரிக்கா, இந்­தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, தென்­னா­பி­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­தி­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர். இறு­தி­யாக இலங்­கையின் சார்பில் அமைச்சர் ஒருவர் உரை­யாற்­ற­வுள்ளார்.

இலங்கை தூதுக்­குழு ஜெனி­வாவில்

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்­னாண்டோ மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களைக் கொண்ட குழு­வினர் ஜெனிவா சென்­றுள்­ள­ளனர். அந்­த­வ­கையில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள கூட்டத் தொடரில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­ற­வுள்ளார். தூதுக்­கு­ழு­வினர் கடந்த சனிக்­கி­ழமை ஜெனிவா நோக்கி பய­ண­மா­கினர்.

இலங்­கைக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்­காவின் பிரே­ரணை

அது மட்­டு­மன்றி இம்­முறை கூட்டத் தொடரில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளது. மனித உரிமை விவ­கா­ரங்­களில் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்டும் நோக்கில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு இலங்­கைக்கு போதிய கால அவ­காசம் ஒன்றை வழங்­க­வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரே­ர­ணையை அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்­ளது.

இலங்­கைக்கு அண்­மையில் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் இதனை அறி­வித்­தி­ருந்தார்.

இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­துக்கு வித்­தி­யா­ச­மான சூழல் ஏற்­பட்­டுள்­ளதை நாங்கள் அங்­கீ­க­ரிக்­கின்றோம். நாங்கள் இலங்­கைக்கு சார்­பாக கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ர­ணை­யா­னது தற்­போது இலங்கை தொடர்பில் வெளி­வ­ர­வுள்ள அறிக்­கையை ஆய்­வு­செய்­வ­தா­கவும் அமையும் என்றும் பிஷ்வால் குறிப்­பிட்­டி­ருந்தார்.

முன்­னைய பிரே­ர­ணைகள்

இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் ஒரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 26 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் வாக்­க­ளித்­தன. 8 நாடுகள் நடு­நிலை வகித்­தன.

கடந்த 2013 ஆம் ஆண்­டிலும் இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் ஒரு பிரே­ரணை கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 31 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் வாக்­க­ளித்­தன. ஒரு நாடு நடு­நிலை வகித்­தன. அத்­துடன் கடந்த 2014 ஆம் ஆண்டும் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ராக ஒரு பிரே­ர­ணையை கொண்டு வந்­தது. இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருந்­தன

விசா­ரணை செயற்­பா­டுகள்

இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே இலங்கை தொடர்­பான உள்­ளக விசா­ர­ணையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் முன்­னெ­டுத்­தது. நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நட­த­தி­யது.

ஐ.நா. அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணைக்­காக 12 பேர் கொண்ட விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் இந்த விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

மூன்று நிபு­ணர்கள்

இந்த நிபுணர் குழுவில், சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசை வென்­றுள்­ள­வரும், பின்­லாந்து அரசின் முன்னாள் அதி­ப­ரு­மான மார்ட்டி அதி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் சில்­வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

பிற்­போ­டப்­பட்ட அறிக்கை

கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடு­களின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் இலங்­கையின் ஆறு­மாத கால நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது.

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேர­வையின் தலை­வ­ருக்கு விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்­டெம்பர் மாதத்­துக்கு பிற்­போ­டப்­பட்­டது. அதன்­படி இம்­முறை 30 ஆவது கூட்டத் தொடரில் அறிக்கை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கைக்கு திருப்பு முனை

அந்­த­வ­கையில் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்கை மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை இலங்­கைக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்கா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளமை மற்றும் இலங்கை தொடர்­பான அறிக்கை மீதான விவாதம் போன்ற முக்­கிய விட­யங்கள் இலங்கை தொடர்பில் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இம்­முறைக் கூட்டத் தொடர் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது.

விசேட உப குழுக் கூட்டம்

இதே­வேளை அமெ­ரிக்கா இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளமை தொடர்பில் உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் விசேட உப­குழுக் கூட்டம் ஒன்றை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலு­வ­ல­கத்தில் இந்த விசேட உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இதில் கலந்­து­கொள்­ளு­மாறு மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமெரிக்கா ஏன் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவருகின்றது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவுள்ளதுடன் அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கையும் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

47 உறுப்பு நாடுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த பேரவையில் 47 உறுப்பு நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. கூட்டத் தொடரின்போது உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. சில நாடுகளின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவுள்ளதுடன் பிரேரணைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2015 இல் 7:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: