Lankamuslim.org

One World One Ummah

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலைசெய்த காமகொலைகாரன் யார் ?

leave a comment »

childகம்பஹா , திவுலம்பிட்டிய – கொட்டதெனியாய பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் காணாமல் போன ஷேயா சதெவ்மி என்ற நான்கரை வயது சிறுமி நேற்று காலை 9.30 மணிய­ளவில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட சம்பவம் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் கொலை தொடர்பில் பௌதீக தடயங்கள் உள்ளிட்ட விசேட சாட்சியங்களும் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொட்டதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் மற்றும் சமூகத்தினர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம – அக­ரங்­கஹ பகு­தியில் உள்ள சிறு­மியின் வீட்­டி­லி­ருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் ஓடை­யொன்­றிற்கு அருகில் இருந்தே இந்த சடலம் மீட்­கப்­பட்­ட­தாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்துள்ளார் .சிறு­மியின் சட­ல­மா­னது ஆடைகளின்றி காணப் பட்டதாகவும் சிறுமி கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தற்­கான அடை­யா­ளங்­களை உடலில் அவ­தா­னிக்க முடிந்­த­தா­கவும்அவர் குறிப்பிட்டுள்ளார் .

grபாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் சிறுமி கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தே­கிக்கும் நிலையில் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்­காக நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்த சம்பவம் குறித்து விரி­வான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நீர்­கொ­ழும்பு பொலிஸ் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் நேரடி கட்­டுப்­பாட்டில் உள்ள உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தா­கவும் பதில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்துள்ளார்

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 2010 ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் 16 ஆம் திகதி பிறந்த ஷேயா சதெவ்மி மூவர்­கொண்ட குடும்­பத்தில் இரண்­டா­வது பிள்­ளை­யாவார். அவ­ருக்கு ஒரு மூத்த சகோ­த­ரனும் இளைய சகோ­த­ரியும் உள்­ளனர்.

கம்­பஹா மாவட்­டத்தின் நீர்­கொ­ழும்பு – கொட்­ட­தெ­னி­யாவ வீதியில் படல்­கம – அக­ரங்கா பகு­தியில் சிறுமி ஷேயா சதெவ்மி யின் வீடு அமைந்­துள்­ளது.

இந்த வீட்டில் சிறுமி ஷேயா சதெவ்மி, அவ­ளது சகோ­தரன் சகோ­தரி மற்றும் பெற்­றோ­ருக்கு மேல­தி­க­மக பாட்­டனும் பாட்­டியும் வசித்து வந்­துள்­ளனர். ஆங்­கில ஆசி­ரி­ய­ரான சிறு­மியின் தந்தை, ஆடை தொழிற்­சாலை ஒன்றுடன் தொடர்புடைய தனியார் போக்­கு­வ­ரத்து சேவை­யையும் நடத்­து­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந் நிலையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு சகோ­த­ரர்­க­ளுடன் தொலைக்­காட்சி பார்த்து விட்டு 8.30 மணி­ய­ளவில் சிறுமி ஷேயா சதெவ்மி உறங்கச் சென்­றுள்ளார்.

இதன்­போது சிறு­மியின் தந்தை வீட்டில் இருந்­தி­ருக்­க­வில்லை. பாட்டன், பாட்­டியும் மரண வீடொன்­றுக்கு சென்று விட்டு இரவு 10.10 மணி­யி­லேயே வீட்­டுக்கு வந்­துள்­ளனர்.

அந்த நேரத்தில் வீட்டின் கதவு பூட்­டப்­ப­டாத நிலையில் இருந்­துள்­ளது. அதன் பின்­னரும் அந்த கதவு பூட்­டப்­ப­டாத நிலையில் நள்­ளி­ர­வுக்கு பின்­ன­ரேயே தந்தை வீட்­டுக்கு வந்­துள்ளார். தந்தை வரும் வரை­யி­லேயெ க­தவு பூட்­டப்­ப­டாது இருந்­துள்­ளது.

இந் நிலையில் மறு நாள், அதா­வது நேற்று முன் தினம் காலை காலை சிறு­மியைத் தேடிய சந்­தர்ப்­பத்­தி­லேயே அவர் வீட்டில் இல்­லா­தது தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­ய­டுத்தே அன்று காலை 7.00 மணி­ய­ளவில் கொட்­ட­தெ­னி­யாவ பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறுமி ஷேயா சதெவ்மி சில சம­யங்­களில் பாட்டன் பாட்­டி­யுடன் நித்­தி­ரைக்கு செல்­வதால் அவர்­க­ளிடம் உறங்­கி­யி­ருக்­கலாம் என பெற்­றோரும் பெற்­றோ­ருடன் உறங்கியி­ருக்­கலாம் என பாட்­டியும் பாட்­டனும் நினைத்­ததன் விளை­வாக மறு நாள் காலை வரை சிறுமியை யாரும் தேட வில்லை என பொலிஸார் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் சிறுமி ஷேயா சதெவ்மி இறு­தி­யாக அணிந்­தி­ருந்த சிவப்பு நிற ஆடை அவள் உறக்­கத்­துக்கு செல்லும் கட்­டி­லி­லேயே இருந்து பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டது.

அத்­துடன் சிறுமி உறக்­கத்­துக்கு செல்லும் கட்­டி­லுக்கு அருகில் உள்ள மூன்று ஜன்­னல்களில் ஒரு ஜன்­ன­லுக்கு மட்டும் இரும்புக் கம்­பி­க­ளினால் பாது­காப்புத் தடைகள் எதுவும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது இருந்­த­தையும் பொலிஸார் அவ­தா­னித்­துள்­ளனர்.

திறத்­தி­ருந்த பிர­தான க­தவு அல்­லது பாது­காப்­பற்ற குறித்த ஜன்னல் ஊடக சிறுமி ஷேயா சதெவ்மி கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்­கின்­றனர்.

சம்­பவம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு பரி­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.ஆனால், மோப்ப நாய்கள் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரம் முன்­பா­கவும் 100 மீற்றர் தூரம் பின்­பு­ற­மா­கவும் மாத்­தி­ரமே சென்­றுள்­ளன.

பின்னர் வீட்டைச் சுற்றி சோத­னை­களை பொலிஸார் மேற்­கொண்ட போதிலும் எவ்­வி­த­மான தக­வல்­களும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

இந் நிலை­யி­லேயே நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட தேடு­தலின் போது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள ஓடை ஒன்றின் அருகே பற்றைக் காட்டுக்குள் இருந்த சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நீதிவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலமானது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் வழிகாட்டலின் கீழ் சிறப்பு பொலிஸ் குழுவொன்று முன்னெடுத்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 14, 2015 இல் 6:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: