Lankamuslim.org

One World One Ummah

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மஸ்ஜித்துல் அக்ஸாவுக்குள் நுழைந்து தாக்குதல்

leave a comment »

APTOPIX Mideast Israel Palestiniansகிழக்கு ஜெரூசலத்தில் புதித அல் அக்ஸா மஸ்ஜிதுக்குள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர்  ஊடுருவியதை அடுத்து அங்கு தொழுகையில் ஈடுபட்டவர்களுடன் மோதல் வெடித்துள்ளது.இதன்போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர்  கண்ணீர்ப் புகைப்பிரயோகம், ரப்பர் புள்ளட் தாக்குதல் மற்றும் அதிர்ச்சிதரும் எறிகுண்டுகளை பயன் படுத்தி இருப்பதோடு பலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீப்பிளம்புகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முஸ்லிம்களின் முதல் கிப்லாவும்  மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது  இதில் யூத புதுவருடம் ஆரம்பிப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்னரே மஸ்ஜித்  பகுதியில்  மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மஸ்ஜித்  வளாகத்திற்குள் யூதர்களின் வருகையை தடுப்பதற்கு பலஸ்தீன இளைஞர்கள் தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையை தடுக்க  போராட்டியுள்ளனர்

செயின் மற்றும் மொரோக்கோ வாயில் ஊடாக ஊடுருவிய ஆக்கிரமிப்பாளர்கள் அங்கு இருந்த வழிபாட்டாளர் களை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது வாயில்களை பூட்டி இருக்கும் இஸ்ரேல் படையினர் மஸ்ஜிதுக்குள்  ரப்பர் குண்டு மற்றும் குண்டு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். சில பலஸ்தீனர்கள் மீது மிளா காய்ப்பொடி பீச்சயடித்து தாக்கப்பட்டதாக சம்ப வத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தரப்பு குறிப்பிட்டபோதும் பலரும் காயத்திற்கு உள்ளானதாக பலஸ்தீன தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஆக்கிரமிப்பு படை  சேதங்களை ஏற்படுத்தியுள்ளது , தொழுகை விரிப்பும் பகுதியளவு தீயில் சாம்பலாகியுள்ளது

பின்னர் இந்த மோதல் மஸ்ஜிதுக்கு  வெளியிலும் பரவியிருப்பதோடு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர்  கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளை எமது முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்
Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 13, 2015 இல் 11:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: