Lankamuslim.org

One World One Ummah

இந்தியா : சிலிண்டர் வெடி விபத்தில் 82 பேர் பலி

with one comment

inஇந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதனால் உணவகக் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அருகாமையில் உள்ள சில கட்டிடங்களும் இடிந்து வீழ்ந்ததால், கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர்.ஆரம்பத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 82 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது 50 இற்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 12, 2015 இல் 1:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. மத்திய பிரதேச குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

    உண்மையில், குண்டுவெடிப்பின் தொடக்கமே பதுக்கி வைக்கப்படிருந்த வெடிபொருட்கள் தான் என்றும், குண்டு வெடிப்பின் தாக்கத்தினால் தான் பக்கத்து ஹோட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த வீடு லோக்கல் பாஜக தலைவருக்கு சொந்தமானது என்றும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

    தற்போது தலைமறைவாகியுள்ள அந்த பாஜக தலைவர், சுரங்கத்திற்கு பயன்படுத்தபடும் வெடிபொருட்களை நகரத்தின் மையப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

    காங்கிரசின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த ஹோட்டலில் இருந்தது ஒரு சிலிண்டர் மட்டுமே என்றும், அதனால் இவ்வளவு கொடூரமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெடிபொருட்கள் பதுக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடவும் தொடங்கி விட்டனர்.

    வியாபம் கொலைகள் போதாதென்று இப்போது இது வேறு. கொலைகளின் தலைநகரமாக மத்திய பிரதேசம் மாறுவதற்குள் முடிவு கட்டுவது நல்லது. ஆனால் இப்படியான ஆட்சியில் அது சாத்தியமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது என்னவோ உண்மை.

    indian Bro

    செப்ரெம்பர் 14, 2015 at 6:00 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: