Lankamuslim.org

One World One Ummah

கஷ்மீர் : இந்திய இராணுவத்தின் கற்பழிப்புக்கள் ,படுகொலைகள் ஆதாரங்களுடன்

leave a comment »

kaஜம்மு கஷ்மீரில் இந்திய அரசு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கஷ்மீரில் இந்திய இராணுவம் மேற்கொண்ட சாட்சியங்கள் உள்ள பயங்கரவாத சம்பவங்கள்   தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன .

ஜம்மு கஷ்மீரில் இந்திய அரசு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள  அந்த அறிக்கையில்    இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ள   சித்திரவதைகள், பாலியல் பலாத்காரங்கள், சட்டவிரோதக் கொலைகள், ஆட்கள் காணாமல் போவது பற்றிய 333 சம்பவங்களை குறிப்பிட்டப்பட்டுள்ளது . குறிப்பாக ஜம்மு-கஷ்மீரில்  குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் நேரடியாக ஈடுபட்டுள்ள குற்றங்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன விசேட அம்சமாகும் .

கடந்த 25 ஆண்டுகளாக ஜம்மு கஷ்மீரில்  அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 464 இந்திய இராணுவ மற்றும் போலீஸ் படையினர், துணை இராணுவப் படையினர், இந்திய அரசு ஆயுதப் படையினர் ஆகியோர் ‘வன்முறைகளின் முகவர்களாக’ இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை சாட்சியங்கள் உள்ளவை மட்டுமே  ஆதாரங்கள் இன்றி கஷ்மீர் மக்கள் தினமும் இந்திய இராணுவத்தின் படுமோசமான பயங்கரவாதத்தை எதிர்கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

குறித்த அறிக்கையில் ஒரு மேஜர் ஜெனரல், 7 பிரிகேடியர்கள், 31 கேணல்கள்  4 லெப்டினண்ட் கேணல்கள் 115 மேஜர்கள், 40 கேப்டன்கள், துணை இராணுவப் படையைச் சேர்ந்த 54 மூத்த அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது இந்த அறிக்கை. ஸ்ரீநகரில் வெளியிடப்படவுள்ளது.

“ஜம்மு-கஷ்மீரில் உள்ள இந்திய  படைகளின் எண்ணிக்கை தோராயமாக 7,50,981 ஆக இருக்கலாம்” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜம்முவில் இந்திய படையினரின் வன்முறைகளின் விதங்கள் மற்றும் அளவு பற்றி இந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது .

Written by lankamuslim

செப்ரெம்பர் 11, 2015 இல் 10:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: