Lankamuslim.org

One World One Ummah

மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சி

with 3 comments

shipமிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பவத்தை மூடிமறைக்க  முயற்சிக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.காலியில் சில மாதங்களுக்கு முன்னதாக மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் கப்பலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளும் தரப்பினரை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி இது குறித்து அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தை மூடிமறைக்கும் சூழ்ச்சியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

22ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் இந்த விடயம் அம்பலப்படுத்தப்படும்.

அவன்கார்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் இடம்பெற்ற சில சம்பவங்கள், அந்த நிறுவனத்துடன் தொடர்புகளைப் பேணிய அதிகாரிகள், அமைச்சர்கள், விசாரணைகளின் போது அழுத்தம் பிரயோகித்த நபர்கள் பற்றியும் வெளிக்கொணரப்படும் என அனுரகுமார திஸாநாயக்க சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியம் குறித்து ஜே.வி.பி விசேட அறிவிப்பு

மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை கொண்டிருந்த அவன்காட் மெரிடைம் தனியார் நிறுவனம் தொடர்பான சம்பவங்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட தயாராகி வருகிறது.

அவன்காட் நிறுவனத்தின் ஆரம்ப முதல் இதுவரை நடந்துள்ள சில சம்பவங்கள் குறித்தும், அந்த நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும், நடைபெற்ற விசாரணைகளுக்கு அழுத்தங்களை கொடுத்த நபர்கள் தொடர்பாகவும் மக்கள் விடுதலை முன்னணி தனது இந்த விசேட அறிக்கையில் பல தகவல்களை வெளியிட உள்ளதாக தெரியவருகிறது.

அவன்காட் நிறுவனத்தின் தலைவரான முன்னாள் இராணுவ அதிகாரி நிஸ்சங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டதை நீக்க அன்றைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பிரதமரின் ஆலோசகர் திலக் மாரப்பன ஆகியோ சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தாக கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்ததுடன் அது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன் அவன்காட் நிறுவனம் சம்பந்தமான விசாரணையை கீழடிப்புச் செய்வதற்காக தனக்கு இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்னவும் கூறியிருந்தார்.

அவன்காட் நிறுவனத்தின் தலைவரது கடவுச்சீட்டு ஜனவரி 23 ஆம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டது. எனினும் 7 மாதங்களுக்கு பின்னர், அவரது கடவுச்சீட்டை தொடர்ந்தும் முடக்கி வைக்க தேவையில்லை, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அவன்காட் நிறுவனத்தின் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உத்தேசம் இல்லை என புலனாய்வு திணைக்கத்தினர் தாக்கல் செய்த அறிக்கையை ஆராயந்த பின்னர், நீதவான் கடவுச்சீட்டை திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தார்.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவர், கடந்த பொதுத் தேர்தலில் பிரசாரப் பணிகளுக்காக அவன்காட் நிறுவனத்திடம் பணத்தை பெற்றுக்கொண்டதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 9, 2015 இல் 3:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. GOOD GOVERNANCE??…hhhaahaa… heehahahhe…

  GOOD GOVERNANCE WITH BAD PEOPLE????

  rather Mr. My3 can name this governance as ‘FUNNY” governance!! because… all actors are funny!
  except.. JVP and Sopitha thero!!

  நல்லாட்சி..?? ஹ்ஹாஹீஹெ..ஹீஹீ…

  முன்னாள் கள்வர்களுடனும், காடையர்களுடனும் சேர்ந்து,
  இந்நாள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் அரங்கேற்றும் நாடகம்!

  இதற்கு பெயர் நல்லாட்சியல்ல… மாறாக… குள்ளர்களின் கேளியாட்சி!

  இந்த ஆட்சியில் பங்கெடுக்கும் எல்லோரும் ஜோக்கர்கள்! ஏமாற்று வித்தகர்கள்!(ஜேவிபி கட்சியும், சோபித தேரரும் தவிர)

  Risniy

  செப்ரெம்பர் 10, 2015 at 10:01 முப

  • இந்த நல்லாட்சியாளர்கள் தலைவர் மைத்திரி ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்….. தன்னை ஜனாதிபதியாக்கியது (முதலில் அல்லாஹ் நாட்டப்படி) யு.என்.பியோ எஸ்.எல்.எப்.பியோ அல்ல,… மாறாக, ஜே.வி.பி.யினதும் மிக முக்கியமாக சோபித தேரரினரும் போராட்டமேயாகும்.

   Risniy

   செப்ரெம்பர் 10, 2015 at 10:07 முப

   • “அரசனை நம்பி, புருஷனை கைவிட்டு விட்டோமே” என்று மக்களை யோசிக்க வைக்கிறது இந்த my3யின் நல்லாட்சி!

    Risniy

    செப்ரெம்பர் 10, 2015 at 10:21 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: