Lankamuslim.org

One World One Ummah

நாட்டுக்கும் ,மக்களுக்கும் மிகப் பொருத்தமான புதிய அரசியல் யாப்பு வரையப்படும் : நீதி அமைச்சர்

leave a comment »

newதேசிய அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப் பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை தோற்றுவிப்பதற்குப் பொருத்தமான சூழல் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கேற்ற அரசியலமைப்பொன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு மக்களிடம் முன்வைக் கப்பட்ட கோரிக்கைக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இதற்கமைய உச்ச சட்ட வாக்கத்தைக் கொண்ட நாட்டிற்கும் மக்களுக்கும் பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளதெனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சராக நேற்றுக் காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக் குறித்து நம்பிக்கை வெளியிட்டார்.

அரசியலமைப்பு ஆரம்பம் முதல் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகியுள்ளது. 18 தடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் எமது அரசியலமைப்பு முன்னரிலும் குழம்பிபோயுள்ளது. இந்நிலைமை மேலும் தொடரக்கூடாது என்பதற்காகவே நாட்டிற்கும் மக்களுக்கும் பொருத்த மான இலங்கை அரசியலமைப்பு ஒன்று தேவை என்ற நிலைப்பாட்டிற்கு நாம் வந்ததாகவும் அமைச்சர் குறிப் பிட்டார்.

மேலும் 19வது அரசியலமைப்பின் படி உடனடியாக அரசியலமைப்பு சபையினை நிறுவி, சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான ஆணையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படு மென்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு சில தினங்களில் சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் அறி முகம் செய்யப்படும். அதேநேரம் இது வரை நாட்டில் தவறவிடப்பட்ட நல்லிணக்கம் வலுவான முறையில் முன் னெடுக்கப்படுமென்றும் அவர் கூறினார். புதிய அர­சாங்­கத்தின் கீழும் ஓள­டதச் சட்டம் மத மற்றும் விஹாரை மற்றும் தேவா­ல­யங்கள் தொடர்­பி­லான சட்டம் , தகவல் அறியும் சட்டம் ஆகியவற்­றையும் அழுல் செய்ய உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி சாட்­சி­யங்களை பாது­காக்கும் சட்­ட­மூ­லமும் அமு­லுக்கு வரும்

சுமார் 800 வருடங்களுக்கு முன்பிருந்த உலகில் ஜனநாயகம் என்ற கோட்பாடு முக்கியத்தும் பெற்றது. 1215 முதல் உலக நாடுகள் இதனை கடைபிடிக்க ஆரம்பித்தன. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் இலங்கையிலும் புதிய கலாசார மாக ஜனநாயகம் பின்தொடரப்படு கின்ற போதும் 2015 ஆம் ஆண்டே இலங்கை வரலாற்றில் தடம்பதிக்க கூடிய ஜனநாயகத்துக்கு மிகப் பொருத் தமான ஆண்டாகுமென்றும் அமைச்சர் கூறினார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 9, 2015 இல் 6:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: