Lankamuslim.org

One World One Ummah

மைத்திரியை எமது தலைவராக ஒருபோதும் ஏற்கமுடியாது : மஹிந்த முகாம் அறிவிப்பு

leave a comment »

mahinda_team_001ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியின் முன்னணியின்  சார்பில் பாராளுமன்றத்தை பிரதிநிந்தித்துவப்படுத்தும் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்வின்­போது சுயாதீ­ன­மாக செயற்­ப­டப்­போ­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் வரையில் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­படப் போவ­தில்லை எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ ளனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் புதிய அர­சாங்­கத்தில் தம்­மையும் ஆளும் கட்­சியில் இணைத் துக்கொண்­டுள்­ளதால் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணி ஆகிய பிர­தான இரண்டு கட்­சி­களும் ஆளும் கட்­சி­யா­கவே செயற்­ப­டு­கின்­றன. எனினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் மஹிந்த ஆத­ரவு அணி­யாக செயற்­படும் அணி­யினர் தாம் அரசாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட விரும்­பாத நிலையில் தம்மை எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட அனுமதிக்கக் கோரி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் இப்­போது மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தாம் எதிர்­வரும் பார­ா ளு­மன்ற அமர்வின் போது பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக தெரிவித்துள்ளனர்.

எதிர்­வரும் 22ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கூட­வுள்ள நிலையில் அந்த அமர்வில் தாம் பாரா­ளு­மன் றில் தனித்து செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும், எந்­த­வொரு கட்­சிக்கும் ஆத­ரவு வழங்கப்போவ­தில்லை எனவும் தெரிவித்­துள்­ளனர். இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் நாம் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­டாலும் எம்மால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இந்த அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட முடி­யாது. கட்­சியின் கொள்­கைக்கும், மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திக்கும் முர­ணான வகையில் இப்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பிர­தான உறுப்­பி­னர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆகவே இதை ஒரு­போதும் எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதேபோல் கடந்த இரண்டு தேர்­தல்களின் போதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றியை தடுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எம்மால் ஒரு­போதும் தலை­வ­ராக ஏற்­றுக்­கொள்ள முடியாது. ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியின் தலை­வ­ராக இருக்கும் வரையில் எந்தவொரு சந்­தர்ப்­பத்­திலும் நாம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட மாட்டோம்.

அதேபோல் எதிர்­வரும் மாகா­ண­சபைத் தேர்­தலின் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் உள்ள முக்­கிய ஆறு கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தனித்து கள­மி­றங்க தீர்­மானம் எடுத்­துள்ளோம். அதற்­கான பேச்சுவார்த்­தை­களை நாம் ஆரம்­பித்­துள்ளோம். எனினும் யார் எமது கூட்­டணி என்பதை இப்போது வெளியிட முடியாது. எமது கட்சியின் நலனுக்காகவும் நாட்டை பாதுகாக்கவும் இரகசியமாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் வெளிப்படையாக ஏதேனும் முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எமது முயற்சிகளை முறியடிக்க பலர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.-VK

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 8, 2015 இல் 6:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: