Lankamuslim.org

One World One Ummah

SLTJ நிகழ்ச்சியில் பொது பல சேனா குழப்பம் , முறைப்பாட்டை பதிவு செய்ய பொலிஸ் மறுப்பு

with 3 comments

2SLTJ நிகழ்ச்சியில் பொது பல சேனா அராஜகம் – பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது தவ்ஹீத் ஜமாத் – SLTJ :ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று (06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பில் நேற்றைய தினம் ஹெம்மாதகம க்ரீன் வீச் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் கலந்து கொண்டு மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

குறித்த நிகழ்ச்சியை நடத்த விடாது தடுப்பதற்கு முனைந்த பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகமான முறையில் அரங்கினுல் நுழைந்து நிகழ்ச்சியை நடத்த விடாது அராஜகத்தில் ஈடுபட்டதுடன், சகோதரர் அப்துர் ராசிக் அவர்களை கொலை செய்வோம் என்று கொலை மிரட்டலும் விடுத்தார்கள்.

பொது பல சேனாவின் அராஜகம் காரணமாக நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.

பொது பல சேனாவினர் அத்துமீறி நுழைந்தமை குறித்து ஹெம்மாதகம போலிஸ் நிலையத்தில புகார் செய்வதற்கு சென்ற போது பிக்குகளுக்கு எதிராக புகார் அளித்தால் ஹெம்மாதகம பகுதியை தீ வைத்து எறிப்போம் என பொது பல சேனாவின் பிக்குகள் கூறுவதால் உங்கள் புகாரை பதிவு செய்ய முடியாது என்றும் சமாதானமாகி விடுங்கள் என்றும் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டார். எனவே பொலிஸின் பக்கச் சார்பான செயல்பாடு குறித்தும், பொது பல சேனாவின் அராஜகத்திற்கு எதிராகவும்  இன்றைய தினம் (07.09.2015) கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகம் சார்பாக முறைபாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜமாத்தின் பொதுச் செயலாளர் ராசிக் அவர்கள் “பொது பல சேனாவின் மக்கள் விரோத, மற்றும் ஜனநாயக விரோத செயல்பாடுகள், இனவாத செயல்பாடுகள் மற்றும் அராஜகங்களுக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டப்படி இவர்களின் அராஜகங்களுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் போது ஜமாத்தின் துணை செயலாளர்களான சகோ. ரீஸா யூசுப், சகோ. ரஜாப்தீன், சகோ. முயினுத்தீன் மற்றும் சகோ. ரஸ்மின் ஆகியோரும் உடனிருந்தனர்.

இனவாதத்தை முன்னெடுத்து இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கி, முஸ்லிம்களின் மத செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பொது பல சேனாவின் இனவாத நோய்க்கு சட்ட ரீதியாக விரைவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊடகப் பிரிவு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

1 2

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 7, 2015 இல் 5:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. cm

  செப்ரெம்பர் 7, 2015 at 8:04 பிப

 2. அவசரமான பதிவு)

  இந்த நாட்டில் அரச ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்பட்டு வந்த இனவாதத் தீ, ஜனநாயக வாக்குப் பலத்தின் மூலம் படிப்படியாக அணைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுடன் முற்றாக அணைக்கப்பட்டுவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில், மத்திய மலைநாட்டின் ஹெம்மாதகமை என்னும் கிராமத்தில் SLTJ மேற்கொண்ட அவசியமற்ற ஒரு செயற்பாடு காரணமாக மீண்டும் கொழுந்துவிட ஆரம்பித்து விட்டது.

  மார்க்க விடயங்கள் ஆகட்டும், பொது விடயங்கள் ஆகட்டும், எதிலுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எவ்வித நிதானப் போக்கும் இல்லாமல் செயல்படும் அமைப்பாகவே SLTJ இதுவரை காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இவ்வமைப்பினர், இந்த நாட்டிற்குப் பொருத்தமற்ற முறையில் தமது நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

  இனவாதத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த அச்சமான சூழ்நிலையிலும் மாதம்பையில் 5 பேருக்காக அடாத்தாக ஜும்மா ஆரம்பித்து ஜமாத்தே இஸ்லாமியினரை வம்புக்குத் தூண்டியமை, எவ்வித முன்யோசனையும் இன்றி புத்தர் மனித மாமிசம் உண்டார் என்று பகிரங்கமாக கூறியமை (பின்னர் அதனை வாபஸ் வாங்கினாலும், அது சிங்கள மக்களிடம் எடுபடவில்லை) என்று முஸ்லிம்களின் இருப்புக்கு வேட்டு வைக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  தமிழ்நாட்டில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்கின்ற பெயரில் PJ நடாத்திப் புகழ் பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, உண்மையில் ஒரு மதம் மாற்றும் நிகழ்ச்சியாகவும் கூட நடைபெற்று வந்துள்ளது. மதச்சார்ப்பினையை கடைப்பிடிக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், திராவிட பாரம்பரியத்தில், பெரியாரின் சிந்தனைப் புரட்சியின் தாக்கத்தில் உள்ள தமிழகத்தில் இந்நிகழ்ச்சி ஒரு பொருட்டாக பார்க்கப் படாவிட்டாலும், தமிழ் நாட்டைப் பின்பற்றி இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை இலங்கையில் நடாத்துவது, இலங்கையின் பெளத்த சூழலுக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது ஆகும்.

  தமிழகத்தின் சினிமாக்களில் மணிவண்ணன், விவேக் என்று நடிகர்கள் கடவுளைக் கிண்டல் பண்ணுவது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட விடயம் ஆகும். எனினும் இலங்கையின் பெளத்த கலாச்சாரத்தில் புத்தர் மட்டுமல்ல, சிவுர என்கின்ற காவி உடையை அணிந்த மனிதர் கூட புனிதமானவராகவே மதிக்கப்படுகின்றார். இவை குறித்த எவ்வித கரிசனையும் அற்ற நிலையில் SLTJ அமைப்பினர் தமது செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  சூனியம், பிறை போன்ற விடயங்களில் கூட ஏனைய முஸ்லிம்களை புறக்கணித்து, விவாதம், முஷ்ரிக் பட்டம் என்று பகிரங்கமான பிளவை உண்டுபண்ணும் இவர்களின் செயல்பாடு, முஸ்லிம்கள் என்கின்ற எல்லையை தாண்டி, பெளத்தர்களை குறி வைக்கும் பொழுது, அது இலங்கையில் இன்னொரு பாரிய முஸ்லிம் – சிங்கள இனக் கலவரத்திற்க்கான தூண்டுகோலாக அமையும் என்பதையே ஹெம்மதகமை சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

  ஹெம்மாதகமை சம்பவம் குறித்து SLTJ அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர்களை தாக்க முயலும் பெளத்த தேரர்களும், அவர்களுடன் வந்தவர்களும் “புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் என்று சொன்னவர்களை விடமாட்டோம்” என்று கூச்சலிடுவதை பல தடவைகள் கேட்கக் கூடியதாக உள்ளது.

  நாட்டின் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், ஜமியத்துல் உலமாவினர், மற்றும் ஏனைய தலைவர்கள் உடனடியாக செயற்பட்டு SLTJ யினரின் செயற்பாடுகளை ஒரு கட்டுப்பட்டிற்குள் கொண்டுவராவிட்டால் முஸ்லிம் – சிங்கள கலவரங்கள் உருவாக ஏதுவாக அமைவதை தவிர்க்க முடியாமல் போவதுடன், இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் இருப்பும் கேள்விக்குறியாக மாறும். ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமை இங்கு ஏற்பட ஒருபோதும் சந்தர்ப்பங்களை வழங்கிவிடக் கூடாது.

  ஏற்கனவே அளுத்கமை வன்முறையின் தாக்கங்களில் இருந்து முற்றாக மீட்சியடையாத நிலையில், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் வன்முறை தூண்டப்படுவதை தவிர்க்க வேண்டுமானால், உடனடி நடவடிக்கை அவசியமாகும்.

  ஆட்சி மாற்றத்துடன் ஏற்பட்ட அமைதியான சூழ்நிலை, ஹெம்மாதகமை குழப்பத்தின் மூலம்அநியாயமாக மாசு படுத்தப் பட்டுள்ளது, அது தொடர்வதற்கு முஸ்லிம் புத்திஜீவிகளும், தலைமைகளும் இடம் கொடுக்கக் கூடாது.

  சுவைர் மீரான்

  செப்ரெம்பர் 8, 2015 at 10:44 முப

 3. SLTJ யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வு பற்றிய மாற்று மத நண்பர்களின் புகழாரம்.

  நாடு முழுவதும் சிங்களம் / தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே!

  இந்நிலையில் கடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம க்ரீன் வீச் ஹோட்டலில் வைத்து இதே நிகழ்ச்சி நடைபெற்ற போது, பொது பல சேனாவின் காடையர்கள் குறித்த நிகழ்ச்சியில் அடாவடித்தனம் செய்தமையினால் நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.

  ஹெம்மாதகம நிகழ்வு தொடர்பாக கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிந்து வரும் சில சகோதரர்கள். தவ்ஹீத் ஜமாத் நடத்தி வரும் இந்நிகழ்வு தேவையற்றது என்ற கோணத்தில் கருத்துப் பதிந்து வருகின்றார்கள்.

  நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. இப்போது அதனை கெடுக்கப் பார்க்கின்றார்கள்.

  என்றெல்லாம் மைத்திரி ஆட்சியை ஏதோ மலக்குமார்களின் ஆட்சியைப் போல் நினைத்துக் கொண்டு, மைத்திரி ஆட்சி வந்தவுடன் இனவாதமே இல்லாமல் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டு கருத்துப் பதிந்து வருபவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கருத்துக்களைப் பதிய வேண்டும்.

  யாருக்கும் பயந்து சத்தியத்தை மறைக்கும் கூட்டமல்ல தவ்ஹீத் ஜமாத்.

  ‪#‎இஸ்லாம்‬ தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?

  #இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றதா?

  ‪#‎முஸ்லிம்கள்‬ ஆடு, மாடுகளை அறுப்பது ஏன்?

  ‪#‎முஸ்லிம்‬ ஆண்கள் தாடி வைப்பது ஏன்?

  #முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்?

  ‪#‎ஹழால்‬ உணவு ஏன்? எதற்கு?

  ‪#‎குர்ஆன்‬ சொல்லும் சத்தியக் கருத்துக்கள் என்ன?

  போன்ற இஸ்லாம் பற்றிய எத்தனையோ சந்தேகங்களுக்கு பகிரங்கமாக, நளினமாக பதில் அளிக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியையே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முன்னெடுத்து வருகின்றது.

  மாற்றுமத சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை இனியாவது நாம் தெளிவு படுத்தா விட்டால், இனி வரும் காலங்களிலும் இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மீதும் உள்ள தப்பான எண்ணங்கள் பெரும் களவரத்திற்கே வித்திட்டு விடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களில் சிலர் தவறாக சித்தரிக்க முனைந்தாலும், மாற்று மத நண்பர்கள் மத்தியில் இந்நிகழ்வு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதற்கு மாற்றுமத நண்பர்கள் இது பற்றி தெளிவிக்கும் கருத்துக்களே போதிய ஆதாரங்களாகும்.

  இந்நிகழ்வில் கலந்து கொண்ட / கலந்து கொள்கின்ற மாற்று மத நண்பர்கள் அனைவரும் இந்நிகழ்வு தொடர்பில் சிறப்பான அபிப்பிராயங்களையே வெளியிட்டு வருகின்றார்கள்.

  இறைவனின் சத்தியக் கருத்துக்களை யாருக்கும் சளைக்காமல் எடுத்துச் சொல்லி வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஒருக் காலும் அசத்தியத்திற்கு அடி பணியாது என்பதுடன், அசத்தியவாதிகளை அடையாளப் படுத்தும் பணியில் தொடர்ந்தும் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  இனிய மார்க்கம் நிகழ்ச்சி பற்றிய மாற்று மத நண்பர்களின் கருத்துக்கள் அடங்கிய வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.

  SLTJ

  செப்ரெம்பர் 8, 2015 at 11:05 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: