Lankamuslim.org

One World One Ummah

”மஹிந்த முகாம்” ”நல்ல உள்ளங்கள்” பாராளுமன்றத்தை குழப்புமா ?

leave a comment »

mahiபாராளுமன்றத்தில்  கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் தற்போதைய   பராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனை தெரிவு செய்தமைக்கு எதிராக, எதிர்வரும் நாட்களில் பாரா ளுமன்றில் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வுகளின் பின்னர் யார் எதிர்க்கட்சியில் இருக்கப் போகின்றார்கள் என்பதனை அடையாளம் கண்டு, அவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அதேவேளை நல்ல உள்ளம் கொண்டவர்கள் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றியிருக்கின்றார்கள். அவ்வாறு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கு இன்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் எனக்கு மக்களினால் வழங்கப்பட்டு வரும் வரவேற்பு நிகழ்வுகளின் போது இந்த விடயத்தை மக்கள் கூறுகின்றார்கள். முன்னாள் ஜனாதிபதியுடன் இருப்பவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என குமார வெல்கம தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்கட்சி தலைவர் தொடர்பான குழப்பத்திற்கு காரணம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்  செயலாளர், பேராசிரியர் விஸ்வ வர்ணபால என சமீபத்தில் ஒரு பேட்டியில் பந்துல குணவர்த்தன தெரிவித்திருக்கிறார்.

தற்போது விஸ்வ வர்ணபால ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாப்பு விதிகளுக்கு முரணாக செயற்படுவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளர்களின் அனுமதியின்றி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக பந்துல தெரிவித்துள்ளார்.எனினும், தற்போது ஐக்கிய மக்கள் முன்னணியின் உள் முரண்பாடுகளின் விளைவாகவே குழப்பம் நீடிப்பதாகவும், தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும்  பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்கட்சி தலைவர் என்பது எதிர்தரப்பில் இருக்கின்ற எண்ணிக்கையில் கூடியதரப்பினரில் இருந்தே நியமிக்கப்படவேண்டும் எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்தரப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பினை விட அதிக அளவில் இருப்பதாகவும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 7, 2015 இல் 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: