Lankamuslim.org

One World One Ummah

மாத்தளை -மஸ்ஜித் காணி ஆக்கிரமிப்பு- முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் …

leave a comment »

mataleமாத்தளை , கந்தேநுவர தேட்டத்தில் அமைந்துள்ள நூர் ­ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்த­மான காணியை தோட்­டத்தில் தொழில் புரியும் மாற்று மதத்­தவர் ஒருவர் சட்டவிரோ­த­மாக வீடொன்­றினைக் கட்டி உரிமை கொண்­டாடி வரு­வ­தாக கந்­தே­நு­வர பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட வீடு பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான மைய­வா­டிக்கு அருகில் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வீட்டைச் சுற்றி அமைக்­கப்­பட்­டுள்ள வேலியை எவரும் அப்­பு­றப்­ப­டுத்­தாத வகையில் வேலிக்கு மின்­சாரக் கம்­பிகள் இணைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் ஐ.நஸுர்தீன்  தெரி­வித்தார்.

ஒரு ஏக்கர் 2 ரூட் பரப்­ப­ளவைக் கொண்ட இக்­காணி 1963ஆம் ஆண்டு மர்ஹூம் மீசான் ஹாஜி­யாரால் பள்ளி­வா­ச­லுக்கு வக்பு செய்­யப்­பட்­ட­தாகும். பள்­ளி­வாசல் வக்பு சபையில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

3 மாதங்­க­ளுக்கு முன்பு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இவ்­வீட்டில் மாற்று மதத்­தவர், குடி­யி­ருக்­காது விட்­டாலும் அப்­பு­றப்­ப­டுத்திக் கொள்ள மறுத்து உரிமை கொண்­டாடி வரு­கிறார். இப்­ப­கு­தியில் 56 முஸ்லிம் குடும்பங்கள் இருக்­கின்­றன.

குடும்­பத்­தி­லுள்­ள­வர்கள் பெரும்­பா­லானோர் அரு­கி­லுள்ள நக­ரத்­துக்கும் தோட்­டத்­துக்கும் வேலைக்குச் செல்­வதை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டே இவ்­வீடு கட்­டப்­பட்­டுள்­ளது எனவும் ஐ.நஸுர்தீன் தெரிவித்தார்.

காணி பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மா­னது என்­ப­தற்­கான காணி உறுதி, வரை­படம், பள்­ளி­வாசல் பதிவு போன்ற ஆவ­ணங்கள் எம்­மிடம் இருந்தும் பொலிஸார் கட்­டப்­பட்­டுள்ள வீட்­டுக்கு எதி­ரா­கவும், சம்பந்தப்பட்­ட­வ­ருக்கு எதி­ரா­கவும் எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்­பாக மேற்­கொள்ள வேண்­டிய சட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் பற்றி ஆராய்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாக சபை இன்று வெள்­ளிக்­கி­ழமை கூட­வுள்­ளது.

கட்­டப்­பட்­டுள்ள வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிக்கு மின்சாரம் பாய்ச்சிய கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதெனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -விடி­வெள்­ளி

Written by lankamuslim

செப்ரெம்பர் 4, 2015 இல் 3:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: