Lankamuslim.org

One World One Ummah

சட்ட வைத்திய அதிகாரியாக கடமை புரியும் அஜித் தென்னகோன் தொடர்பில் முறைப்பாடு !!!

leave a comment »

hiரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணித்த வேளையில், முதன் முதலில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தற்போது சட்ட வைத்திய அதிகாரியாக கடமை புரியும் அஜித் தென்னகோன், குறித்த பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்களை மிரட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டை, கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமரசேகர கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாஜுதீனின் மரணம் தொடர்பில் அவரிடமிருந்து பக்கச் சார்பற்ற இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கையினை எதிர்பார்க்க முடியாது என அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2012 மார்ச் மாதம் 17ஆம் திகதி தாஜுதீனின் உடல் மேலதிக சட்ட வைத்திய அதிகாரியின் உதவியுடன், வெட்டப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையை, தான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மரண விசாரணை ஆரம்பமானதை அடுத்து, தான் நடாத்திய பிரேத பரிசோதனை தொடர்பில் இரகசிய பொலிஸார் இது குறித்து தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசாரணையின்போது, தான் வழங்கிய அறிக்கைகளை நன்றாக வாசித்து விடையளிக்குமாறு இரகசிய பொலிஸார் தெரிவித்ததாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நீதிமன்றத்திற்கு பிரதியொன்று வழங்கும் வகையில் எழுத்து மூலமாக தம்மிடம் கேள்விகளை கேட்குமாறு தான் கேட்டுக் கொண்டதாகவும், அதனை இரகசிய பொலிஸார் மறுத்ததாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2013 ஜூன் 03 ஆம் திகதி, தான் சேவையிலிருந்து ஓய்வு பெறும் வேளையில், தான் எழுதிய அறிக்கைகளின் பிரதான பிரதிகளை தான் எடுத்துச் சென்றதாகவும், விசாரணைகள் தொடர்பான துணை பிரதிகள் காரியாலயத்தில் விட்டுச் சென்றதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இரண்டாவது பிரேத பரிசோதனையின்போது தற்போதுள்ள சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட குழுவினரால் தாஜுதீனின் உடலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது சேவைக் காலத்தின்போது தனக்கு அடுத்த நிலையில் கடமையாற்றியதாகவும், இதன் போது அவர் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து தன்னிடம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பேராசிரியர் சமரசேகர தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது கடமையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி, தான் கடமையிலிருந்த சமயத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில், தன்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அதனை சுகாதாரப் பணிப்பாளர் மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 இல் 5:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: