Lankamuslim.org

One World One Ummah

ஊழல்வாதிகளுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய : மாயாதுன்ன

with one comment

mayaதேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ். மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

தன் மீது நம்பிக்கை வைத்து தன்னால், முன்னெடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர கட்சிக்குள் வெளியில் இருந்த தனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களை விளக்கி உரையாற்றும் போதே மாயதுன்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி என்னை தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

எனினும் ஊழல் இல்லாத நாட்டை காண்பது எனது அபிலாஷை . ஊழலுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் மக்கள் விடுதலை முன்னணி எதிர்பார்த்தது போல, கடந்த தேர்தலில் அந்த கொள்கைக்கு மக்கள் அங்கீகாரத்தை வழங்கவில்லை.

இதனால், தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்ட என்னை போன்ற படித்த புத்திசாலிகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இதனால், மக்களின் நிலைப்பாட்டுக்கு தலைவணங்கி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்தேன்.

அரச சேவையை அரசியல்  மயப்படுத்தலில் இருந்து விடுவிக்கவும் அரச சேவையை பாதுகாக்கவும் பல அர்ப்பணிப்புக்களை செய்த மக்கள் விடுதலை முன்னணிக்கு அரச ஊழியர்களின் வாக்குகளான தபால் மூல வாக்களிப்பிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. 7.5 வீத தபால் மூல வாக்குகளையே மக்கள் விடுதலை முன்னணி பெற்றது.

இதனால், மக்கள் ஊழல் எதிர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. ஊழல்வாதிகளுக்கே அங்கீகாரம் வழங்கியிருப்பதால், மிகவும் ஜனநாயக ரீதியில் மக்களின் நிலைப்பாட்டுக்கு தலைவணங்கி நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனவும் மாயாதுன்ன கூறியுள்ளார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 இல் 1:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. மிகச் சரியான அளவீடு!

    மாற்றம் ஒன்றை விரும்பிய மக்கள், சந்தர்ப்பவசத்தால் தேவையான மாற்றத்திற்கான சரியான பாதையில் காலடி வைக்கவில்லை என்பதே, ஊழல் பேர்வழிகளிள் மீள் பிரவேசமும், அதற்கெதிரான குரல்களின் பின்னடைவும்!

    மக்கள் இரு சாராராகப் பிரிந்து நின்ற நிலை இப்பொதுத் தேர்தலில் ஊழல்கார்களுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதனை மக்களின் அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட சறுகல் நிலையே தவிர இல்லை.

    மஹிந்தரின் தலைமை வேண்டும், வேண்டாம் என்ற நிலையில் நடைபெற்ற தேர்தலில், ஊழல் பேர்வழிகள் இனங் காணப்பட்டு நிராகரிக்கப்படும் சாதக நிலை மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆயினும்கூட, ‌ஊழல், மதவிரோத சிந்தனை, போதை வஸ்து, குழப்பம் போன்றவைகளில் ஈடுபட்ட சிலர் புறந்தள்ளப்பட்டே உள்ளனர் என்பது, நம்பிக்கை ஊட்டக்கூடியதாகவே உள்ளது.

    ஆனால், அப்படியானோர் மீண்டும் அரசிற்குள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையை ஓர் ஆரோக்கியமான செயற்பாடாகக் கருத முடியாது.

    அத்தோடு மந்திரி சபையின் விரிவாக்கம், நலிந்து போயுள்ள இந்நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை.

    அத்தோடு அரசு, மக்கள் நலத்தைவிட பாராளுமன்ற அங்கத்தினரது நலன்களை, விருப்புக்களை நிறைவேற்றுவதிலேயே முன்னுரிமையும், அதீத கவனமும் செலுத்துகின்றது என்ற துர்ப்பாக்கிய நிலை மீண்டும் ஒரு முறை அப்பாவிப் பொது மக்கள் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்டு விட்டார்கள் என்றே எண்ண வைக்கின்றது.

    Nizamhm1944

    செப்ரெம்பர் 4, 2015 at 7:03 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: