Lankamuslim.org

One World One Ummah

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி: 48-45

with one comment

Cabinet-Ministers_0தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

அந்தவகையில் அமைச்சர்கள் 48 பேரும் பிரதியமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படுவர்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 143 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.பிரேரணைக்கு எதிராக 16 வாக்குகள் வழங்கப்பட்டதோடு 63 பேர் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை.

Written by lankamuslim

செப்ரெம்பர் 3, 2015 இல் 11:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெளிவு இல்லை என்பதால் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

    அமைச்சரவையை 30இல் இருந்து 45-48வரை அதிகரிப்பதன் காரணம் என்ன? 48 அமைச்சுக்கள் என்ன? அதில் உள்ளடங்கும் துறைகள் என்ன? இராஜாங்க அமைச்சு எத்தனை? பிரதி அமைச்சு எத்தனை? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

    எனவே முழுமையான தெளிவு இன்றி பிரேரணைக்கு ஆதரவு அளிக்க முடியாது என அவர் கூறனார்.

    தாம் எதிர்பார்க்கும் தெளிவுகள் கிடைக்காவிடின் இன்று மாலை 6 மணிக்கு பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரவுள்ளதாவும் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களிக்கும் என்பதுடன் தனித் தனியே ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்க வேண்டும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

    கடந்த காலங்களில் அமைச்சரவை அதிகம், சாதாரண மக்கள் மீது சுமை சுமத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கமும் அதனையே செய்ய முயற்சிக்கிறது. அப்படியானால் ராஜபக்ஷ ஆட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று அநுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.

    தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி அல்ல அதனால் அக்கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்ட ஒப்பந்தம் பாராளுமன்றில் செல்லுபடியற்றது.

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதென்றால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் என்னவென்று பகிரங்கப்படுத்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரது பெயரால் தேசிய அரசாங்கம் உயிர்பெற்றுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

    Imran

    செப்ரெம்பர் 3, 2015 at 3:05 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: