Lankamuslim.org

One World One Ummah

இராணுவ புலானாய்வுத்துறையினரை குறிவைப்பது பாரிய அபாத்துகான அறிகுறியாம் பொது பல சேனா

leave a comment »

boஇராணுவ புலானாய்வுத்துறையினரை குறிவைப்பதும் ,அவர்களை பலவீனப்படுத்தும் பாரிய அபாயத்துகான அறிகுறி என பெளத்த கடுபோக்கு அமைப்பான பொது பல  சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த கருத்தை வெளியிட்டார். ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனமை தொடர்பில் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் 4 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, பிரகீத் காணாமல்போனாரா அல்லது உயிரிழந்தாரா என தேடுவதற்கு மேலதிகமாக வேறு காரணங்களே இங்கிருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக ராணுவ அதிகாரிகளின் மனநிலையில் பின்னடைவு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தை மதித்து செயற்படும் இலங்கை இராணுவப் படையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சில வெளிநாட்டு சக்திகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சட்டத்தை மதித்து செயற்படும் இராணுவப் படையினரை கொலையாளிகளாக அடையாளப்படுத்த முயற்சிப்பதாகவும் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி சில இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களும், நாட்டுக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்களும் தற்போது நாட்டுக்குள் பிரவேசித்து தங்களது நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதாககவும் தற்போது நல்லாட்சிப் பற்றி பேசி வரும் தரப்பினர் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் என்ற ரீதியில் புலனாய்வு உத்தியோகத்தர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் இதனால் யார் நன்மை அடைகின்றார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியேற்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்புகள் பற்றியும் அவர் விபரித்தார். பிரகீத் எக்னெலிகொட மற்றும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ரோஹிந்த பாசன ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தகவல்களை வழங்கும் ஒற்றர்களாக செயற்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் நிதி பங்களிப்பில் கொழும்பில்  இருந்து செயற்பட்ட ‘தேதுன்ன’ என்ற பத்திரிகைக்கு அந்த ஊடகவியலாளர் பலவித தகவல்களை வழங்கி வந்ததாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 இல் 4:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: