Lankamuslim.org

One World One Ummah

தேசிய அரசாங்கம் உருவாக காரணம் கூறும் லக்ஷ்மன் கிரிஎல்ல

leave a comment »

kiriசர்வதேசத்தில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உட்பட நாட்டின் முக்கியமான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஶ்ரீலங்க சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து பதிலளிக்க வேண்டியுள்ளதால் தனியான அரசாங்கம் உருவாக்கவில்லை என்று லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு நெருக்கடிக்கு தீர்வு வழங்கல், நாட்டின் பொருளாதாரத்தை துரித வளர்ச்சியடைய செய்தல், புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுதல் போன்ற பிரதான நோக்கங்களுக்காக இரு கட்சிகளும் ஒன்றிணைந்து குறுகிய காலமேனும் ஆட்சியமைக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள லக்‌ஷ்மன் கிரிஎல்ல இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும்போதே இதனைத் தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாட்டினுள் விசாரணை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கிய உறுதி மொழியை செயற்படுத்தாததன் காரணமாகவே தற்போது சர்வதே மட்டத்தில் அழுத்தங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமய நிகழ்வுகளுடன் லக்‌ஷ்மன் கிரிஎல்ல புதிய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கயந்த கருனாதிலக உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 2, 2015 இல் 6:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: